இதய தமனிகளை அடைத்து மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்தான ‘சில’ உணவுகள்!

நமது இரத்த நாளங்களின் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 18, 2023, 08:20 AM IST
இதய தமனிகளை அடைத்து மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்தான ‘சில’ உணவுகள்! title=

நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் இரத்தம் அவசியம். ஏனென்றால் இரத்தத்தின் மூலம் மட்டுமே உடலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை எடுத்துச் செல்வதில் இரத்த நாளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் தான் இந்த இரத்த நாளங்களை உள்ளே இருந்து சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதனால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சாதாரணமாக போதுமான அளவு இரத்தம் கிடைக்கும். ஆனால் சில நேரங்களில் தவறான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, இந்த நரம்புகளில் அழுக்கு சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே மாரடைப்பு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு முறை மூலம் இந்த இரத்த நாளங்களை சுத்தமாக வைத்திருக்க முடியும். ஆனால் பல சமயங்களில் இதுபோன்ற சில உணவுகளை ஆரோக்கியமானதாக நினைத்து சாப்பிடுகிறோம், அவை உண்மையில், ஊட்டச்சத்து அளிப்பதை விட நம் இரத்த நாளங்களில் அழுக்குகளையும் கொழுப்புகளையும் நிரப்ப வேலை செய்கின்றன. இந்த உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. வெள்ளை அரிசி

வெள்ளை அரிசி ஒரு சுத்திகரிக்கப்பட்ட தானியமாகும். இது உடலில் விரைவாக உறிஞ்சப்பட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பது மிகச் சிலருக்குத் தெரியும். பல ஆய்வுகள் வெள்ளை அரிசியை அதிகம் உட்கொள்பவர்களுக்கு அவர்களின் தமனிகளில் பிளேக் சேர்வதன் ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே மிதமிஞ்சிய வெள்ளை அரிசி உடலுக்கு நல்லதல்ல

2. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
சர்க்கரையை உட்கொள்வது உங்கள் இரத்த நாளங்களுக்கு மிகப்பெரிய எதிரிகளில் ஒன்றாகும். எனவே அதை உணவில் ஓரளவு கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அதிக சர்க்கரையை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரை ட்ரைகிளிசரைடு வடிவில் நரம்புகளில் சேரத் தொடங்குகிறது.

3. முட்டையின் மஞ்சள் கரு

முட்டை ஆரோக்கியமான உணவு என்பதில் மாற்று கருத்து இல்லை. அது சூப்பர் புட் என அழைக்கப்படுகிறது. ஆனால் முட்டையின் மஞ்சள் கருவை ஆரோக்கியமான உணவில் முழுமையாக சேர்க்க முடியாது. முட்டையின் மஞ்சள் கருவை அதிகமாக சாப்பிடுவதால், தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் குவிந்துவிடும். மேலும், இதில் உள்ள Phosphatidylcholine என்ற தனிமம் தமனிகளில் அழுக்குகளை படிய வைக்கும்.

4. மைதா
இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் ஆரோக்கியமாக இருக்க, மைதா மாவில் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்வதை நிறுத்துவது மிகவும் முக்கியம். வெள்ளை ரொட்டி முதல் பிஸ்கட் வரை அனைத்தும் மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனுடன், சந்தையில் கிடைக்கும் பல உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளும் சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

5. அதிக கொழுப்புள்ள உணவுகள்

ஆரோக்கியமற்ற கொழுப்பு நமது ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியாக மாறி வருகிறது. வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் முதல் ஐஸ்கிரீம் போன்றவற்றில் நிறைய ஆரோக்கியமற்ற கொழுப்பு காணப்படுகிறது, இது நமது இரத்த நாளங்களில் அழுக்குகளை நிரப்ப வேலை செய்கிறது. மக்கள் பெரும்பாலும் இது போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் ஆரோக்கியமானவை என்று கருதுகின்றனர். ஆனால் அது அவ்வாறு இல்லை. வீட்டில் தயாரிக்கபப்ட ஐஸ்கிரீம், பொரித்த உணவுகள் ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு கேடு தான்.

பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள்,  சில பரிந்துரைகள் மற்றும் குறிப்புகள் மட்டுமே. அறிகுறிகள் நீண்ட காலமாக நீடித்தால் அவற்றை புறக்கணிக்காதீர்கள். உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | முட்டையை இந்த முறைகளில் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News