Health Tips In Tamil: கோதுமை நமது பாரம்பரியமான உணவுகளில் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமிண்கள், கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. இதனால், ஆற்றம் அதிகரிக்கும். செரிமானம் ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவும். கோதுமை போலவே அரிசி சாதமும் சமச்சீரான உணவுமுறைக்கு மிகவும் தேவையானது.
மேலும், அரிசி சாதத்தில் கார்ப்போஹைட்ரேட்ஸ் அதிகம் இருக்கிறது. இதன் மூலமும் ஆற்றல் கிடைக்கிறது. குறைவான கொழுப்பு, சோடியம், கொலஸ்ட்ரால் ஆகியவை உள்ளதால் ஆரோக்கியமான உணவாகும். அதிலும் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க நினைப்பவர்கள், உடல் எடை குறைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்த சாதம் மற்றும் கோதுமை சார்ந்த உணவுகளை தவிர்ப்பதை பார்த்திருப்பீர்கள். இதன்மூலம் அவை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் என ஒரு பிம்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அரிசி சாதம் மற்றும் கோதுமை ரொட்டியை தவிர்ப்பதன் மூலம் வரும் பின்விளைவுகளை இங்கு காணலாம்.
ஆரோக்கியமற்ற பசி வரும்
கோதுமை, அரிசி ஆகியவற்றை தவிர்ப்பதால் ஆற்றலுக்காக வேறு உணவுகளை தேடிச்செல்வீர்கள். அதிலும் குறிப்பாக பலரும் அதிக கலோரிகள் கொண்ட நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை நோக்கி நகர்வார்கள். இதனால் அதிக கலோரிகளை சாப்படுவதால் ஆரோக்கியமற்ற வகையில் உடல் எடை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | நுரையீரலை டீடாக்ஸ் செய்து... வஜ்ரம் போல் வலுவாக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்
தசைகள் இழப்பு
அரிசி, கோதுமையை தவிர்ப்பதால் தேவையான கார்ப்ஹைட்ரேட் கிடைக்காது. இதனால் தசை இழப்பு பிரச்னை ஏற்படலாம். கார்ப்போஹைட்ரேட் இல்லாததால் தசை திசுக்களை உடைத்து ஆற்றலை எடுத்துக்கொள்ளும். இதனால் தசைகள் வலுவிழந்து, பலவீனம் ஆகும்.
ஆற்றல் குறையும்
கார்போஹைட்ரேட் உடலுக்கு நிலைத்த ஆற்றலை வழங்குகிறது. மேலும், இதனை சாப்பிடாவிட்டால் உடல் சோர்வு, சோம்பேறித்தனம் உள்ளிட்ட பிரச்சனைகள் வரும். இதனால் அன்றாட வேலைகளை உங்களால் எளிதாக செய்ய இயலாது.
ஊட்டச்சத்து குறைபாடு
அரிசி மற்றும் கோதுமையை தவிர்ப்பதனால் சில ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளும் ஏற்படலாம். கோதுமையில் நார் செத்து கனிமங்கள் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. இதனால் இரும்புச்சத்து குறைப்பாடு, வைட்டமின் பி குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் உடல் சோர்வை உண்டாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமாகவும் வாய்ப்புள்ளது.
செரிமான பிரச்சனை
அரிசி மற்றும் கோதுமை இரண்டையும் தவிர்ப்பதன் மூலம் செரிமான பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படும். வயிற்றில் உப்புசம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் குடல் இயக்கத்திலும் பிரச்சினைகள் இருக்கலாம். குடலில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் சமநிலை குறைந்து விடும். இதனால் உணவுகள் விரைவாக செரிமானமாகாது. தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்காது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | சீனாவில் அதிகரிக்கும் HMPV வைரஸ் பரவல்... அறிகுறிகளும்... சில முக்கிய தகவல்களும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ