கோடையை கூலாக கழிக்க நீர் மோர், உடல் பிரச்சனைகள் no more!!

தயிரை பற்றி பக்கம் பக்கமாய் பேசும் பலரும் கூட அதை விட பன்மடங்கு அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள நீர்மோரைப் பற்றி பேசுவதில்லை. எனினும், இதன் பயன்கள் சொல்லி அடங்காதவை. நீர்மோரின் பல ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 28, 2021, 10:23 PM IST
  • ஆயுர்வேத நூல்களின்படி, மோர் தவறாமல் சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
  • நீர் மோர் நம் உடலை, குறிப்பாக செரிமான அமைப்பை குளிர்ச்சியாக வைக்கிறது.
  • உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்குவதோடு மோர் கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
கோடையை கூலாக கழிக்க நீர் மோர், உடல் பிரச்சனைகள் no more!! title=

மிகவும் எளிமையான பொருட்களுக்குத்தான் மகிமையும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு எளிய, அரிய பானம்தான் நீர்மோர். தயிரைப் பற்றி பக்கம் பக்கமாய் பேசும் பலரும் கூட அதை விட பன்மடங்கு அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள நீர்மோரைப் பற்றி பேசுவதில்லை. எனினும், இதன் பயன்கள் சொல்லி அடங்காதவை. அமைதியாக இருந்து பல அற்புதங்களை நிகழ்த்தும் அதிசயம்தான் நீர்மோர்.

நீர்மோர், 'இந்திரனுக்குக்கூட கிடைக்காத அற்புதம்' என வர்ணிக்கின்றது ஆயுர்வேதம். தமிழர்களின் உணவு மோர் இல்லாமல் முடிவதில்லை. நாம் உண்ணும் உணவை நல்ல முறையில் நிறைவு செய்து வைப்பதில் மோருக்கு ஒரு முக்கிய பங்குண்டு.

கோடை காலத்தில் (Summer) நீர்மோரை விட சிறந்த, எளிய பானத்தை நாம் காண முடியாது. உச்சி வெயில் காலத்தில் வீதிகளில் பந்தல் போட்டு சாலைகளில் செல்பவர்களுக்கு நீர்மோர் கொடுப்பது நம் மரபு. கோடை வெயிலின் தாக்கத்தை உடல் சமாளிக்கவும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் இவ்வாறு செய்யப்படுகின்றது. இவற்றைத் தவிர இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் நீர்மோரில் உள்ளன. அவற்றை இங்கே காணலாம்:

1.அமிலத்தன்மையைக் குறைக்கிறது
நீர்மோர் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. இது அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது. உணவு உட்கொண்டவுடன் வாயுத்தொல்லையோ, அமிலத்தன்மையையோ நீங்கள் உணர்ந்தால், அதிகமாக நீர் மோர் குடிக்கத் துவங்குங்கள். சில நாட்களிலேயே நல்ல வித்தியாசத்தைக் காண்பீர்கள். உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது அமிலத்தன்மையையும் தடுக்கிறது. மோரில், பெருங்காயம், இஞ்சி, மிளகு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். நீர் மோர் குடிப்பதால், அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக ஏற்படும் வயிற்று எரிச்சல் குறையும். 

2. மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுகிறது
மலச்சிக்கல் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு மோர் ஒரு இயற்கையான தீர்வாகும். நீர்மோரை தினமும் குடித்தால், அது அதிக நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால், குடல் இயக்கம் எளிதாகி மலச்சிக்கல் காணாமல் போய்விடும். 

3. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்
நீர் மோர் நம் உடலை, குறிப்பாக செரிமான அமைப்பை குளிர்ச்சியாக வைக்கிறது. ஆகையால், இது ஒரு மிகச்சிறந்த கோடைகால பானமாக கருதப்படுகின்றது. வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படும்போதெல்லாம், உடனடி நிவாரணம் பெற ஒரு கிளாஸ் மோர் குடிக்க வேண்டும்.

4. நீரிழப்பைத் தடுக்கிறது
உங்கள் உடலில் நீரின் அளவை போதுமான அளவு வைத்திருக்க, குறிப்பாக கோடைகாலங்களில் நீர்மோர் உதவும்.  நீரிழப்பு சில வியாதிகளுக்கும் பொதுவான அசதிக்கும் வழிவகுக்கும். நீர்மோரில் அதிக அளவில் எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், இது உங்கள் உடலில் நீர் இழப்பைத் தடுக்கிறது. எனவே, இது இயற்கையாகவே உங்கள் உடலை ஹைட்ரேட் செய்கிறது. மேலும் கோடைகாலங்களில் ஏற்படும்ம் நோய்களிலிருந்து உங்களைக் காக்கிறது. 

5. நச்சுகளை அகற்றுகிறது 
மோரின் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், அதில் ரைபோஃப்ளேவின் உள்ளது. இது உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது சில ஹார்மோன்களின் (Hormones) சுரப்பிலும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்குவதோடு மோர் கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. மோரை வழக்கமாக உட்கொள்வதால், நச்சுகள் உங்கள் உடலில் இருந்து எளிதாக வெளியேறும்.

ALSO READ: ஆன்டிபாடி என்றால் என்ன; கொரோனா தொற்றுடன் போராட அது எவ்வாறு உதவுகிறது?

6. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
மோரில் பலவகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், அதாவது பொட்டாசியம், வைட்டமின் பி போன்றவை உள்ளன. இது புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகவும் இருக்கிறது. மோர் உடலில் வைட்டமின் குறைபாட்டை சமநிலைப்படுத்த ஏற்றது. 

7. மோரில் அதிக அளவு கால்சியம் உள்ளது
மோரில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. பலருக்கு லாக்டோஸ் உட்கொண்டால் பிரச்சனை ஏற்படும், அதாவது, அவர்களுக்கு பால் அல்லது பால் சார்ந்த பொருட்களை உட்கொண்டால் அது உடலுக்கு ஒப்பாது. அத்தகையவர்களும் எந்த அச்சமும் இல்லாமல் நீர்மோரை உட்கொண்டு தங்கள் உடலில் கால்சியம் அளவைப் பெருக்கிக்கொள்ளலாம். இதில் கொழுப்பு சத்து இல்லாததால், எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற பானமாக உள்ளது.

8. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
சில ஆய்வுகளின்படி, மோரை வழக்கமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கும். கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்ட பயோஆக்டிவ் புரதங்கள் இருப்பதால், அதிக இரத்த அழுத்தம் (Blood Pressure) உள்ள நோயாளிகளுக்கு மோர் பரிந்துரைக்கப்படுகிறது.

9. கொழுப்பைக் குறைக்கிறது
ஆயுர்வேத நூல்களின்படி, மோர் தவறாமல் சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மோர் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சில ஆய்வுகள் காட்டுகின்றன.

10. நோய்களைத் தடுக்கும்
மோர் Milk Fat Globule Membrane (MFGM)-ஐக் கொண்டுள்ளது, இது பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகளைக் கொண்டுள்ளது. எனவே, மோர் குடிப்பதால் பல்வேறு தேவையற்ற நோய்கள் மற்றும் வியாதிகள் வராமல் நாம் தடுக்கலாம். 

ALSO READ: குட்டி கருப்பு மிளகில் கொட்டிக்கிடக்கின்றன ஆரோக்கிய நன்மைகள்: முழு விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News