ஒரு குறிப்பிட்ட உணவு நல்லது என்று கூறினால் அதை பலர் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் அப்படி எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வகையில் எலுமிச்சை சாறும் அப்படித்தான். உடலுக்கு நல்லது என்று குறிப்பிடப்படும் எலுமிச்சை நீரை அதிகமாக பருகினால் பக்க விளைவுகள் ஏற்படும். எலுமிச்சை, அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது. ஒரு நபர் எலுமிச்சை சாறை அதிகமாகவோ, அடிக்கடியோ உட்கொண்டால் அதில் இருக்கும் அமிலத்தன்மை காரணமாக பல் சிதைவு ஏற்படும். பற்களில் எலுமிச்சை சாறு நேரடியாக வெளிப்படுவதை தவிர்க்க ஸ்ட்ரா பயன்படுத்தலாம்.
எலுமிச்சை ஜூஸ் உட்கொண்ட பிறகு பல் துலக்கும் வழக்கத்தையோ, வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையோ பின்பற்றலாம். எலுமிச்சை சாறுடன் நிறைய தண்ணீர் குடிப்பது பல் சிதைவை தாமதப்படுத்தக்கூடும். எனவே எலுமிச்சை சாறு பருகியவுடன் பற்களை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வாய்ப்புண்:
சிட்ரஸ் பழங்கள் வாய் புண்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. எனவே வாய் பகுதியில் வெடிப்பு, கொப்புளங்கள், புண்கள் இருந்தால் அவை ஆறும்வரை எலுமிச்சை சாறு பருகாமல் இருப்பது நல்லது.
நோய்க்கிருமிகள்:
எலுமிச்சையின் தோல் பகுதிகள் தீங்கு விளைவிக்கும் நோய் கிருமிகளுக்கு புகலிடம் அளிக்கின்றன. உணவகங்களில் பெரும்பாலும் எலுமிச்சை பானங்களுடன் எலுமிச்சை துண்டுகளும் பரிமாறப்படுகின்றன. எலுமிச்சையின் தோலில் ஆபத்தான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சாப்பிடுவதுதான் நல்லது. தினமும் எலுமிச்சை சாறு பருகுவதில் தவறில்லை. எத்தனை பழங்கள் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.
ஒற்றைத்தலைவலி:
சிட்ரஸ் பழங்கள் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியை தூண்டும். எலுமிச்சையில் டைரமைன் என்ற இயற்கையான மோனோ அமைன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அடிக்கடி தலைவலியை உண்டாக்கும். எனவே, தொடர்ந்து தலைவலியை அனுபவிப்பவராக இருந்தால், எலுமிச்சை சாறு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
வயிறு பிரச்னை:
சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்பவர்கள் பெரும்பாலும் இரைப்பை குடல் பிரச்னைகள், நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால் எலுமிச்சை தண்ணீரை குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் படிக்க | மழைக்காலங்களில் ஏற்படும் வாய்ப்புண் - வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ