Health Alert: தவறான நேரத்தில் அல்லது தவறான வழியில் உட்கொள்ளப்படும் மருந்துகள் உடலுக்கு விஷம் போல் செயல்படுகின்றன. இது ஆரோக்கியமான உணவுக்கும் பொருந்தும். நாம் அறியாமல் தவறான நேரத்தில் ஆரோக்கியமான உணவையே உட்கொண்டாலும், அது நம் உடலுக்கு தீங்கையே விளைவிக்கும். இந்த வகையில், உங்கள் உடலை நோய்வாய்ப்படுத்தும் சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பழச்சாறு:
பழச்சாறு (Fruit Juice) உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், பழச்சாறுகளை தொடர்ந்து உட்கொண்டால், அவர்களது உடலில் சோம்பல் அதிகரிக்கும். உடல் பருமனும் அதிகரிக்கக்கூடும். பழச்சாறுகளில் ஃபைபரும் அதிகபட்ச அளவு சர்க்கரையும் உள்ளது. இதனால் உங்கள் செரிமானத்தின் வேகம் குறையலாம். இதனால் உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
சில பால் பொருட்கள்:
அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை கொண்டவர்கள் அதிக பால் பொருட்களைப் (Dairy Products) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றை தயாரிப்பதில், முழு கிரீம் பயன்படுத்தப்படுகிறது. இது கொழுப்பை அதிகரிப்பதோடு, உடலில் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கிறது.
ALSO READ | இந்த பாதிப்பு உள்ளவர்கள் தப்பித்தவறி கூட மஞ்சளை உட்கொள்ள வேண்டாம்
வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்புகள்:
பெரும்பாலான மக்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த இனிப்புகளையும் (Sweets) ஆர்டர் செய்யாமல், வீட்டிலேயே இவற்றை செய்து அவற்றை உட்கொள்கின்றனர். இது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால், இவற்றின் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கியத்தை கெடுக்கும்.
பொரித்த உணவு:
இந்த தொற்று காலத்தில், பெரும்பாலும் மக்கள் வெளியே அதிகமாக சாப்பிடுவது இல்லை. ஆனால், வீட்டில் செய்யும் பிரட் பக்கோடா, சீலா, பூரி, பிரெஞ்ச் பிரைஸ் போன்ற உணவுகளை யாருக்குத்தான் பிடிக்காது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். ஏனெனில், இவை உங்களை நோய்வாய்ப்பட வைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜீ மீடியா இவற்றை அங்கீகரிக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.)
ALSO READ | Sesamin: புற்றுநோய் செல்களை அழிக்கும் கருப்பு எள்! அளவுக்கு மிஞ்சினால்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR