45 வயதிலும் உடலை இளமையாக வைத்துக்கொள்வது எப்படி? ஜோதிகா சொல்லும் சீக்ரெட்!

Actress Jyothika Fitness Secrets : நடிகை ஜோதிகா, தனது உடலை கட்டுக்காேப்பாக வைத்துள்ளார் என்பது உலகறிந்த கதை. இவரது ஃபிட்னஸ் சீக்ரெட்தான் என்ன? இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Mar 19, 2024, 05:52 PM IST
  • ஜோதிகாவிற்கு 45 வயதாகிறது
  • இந்த வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது எப்படி?
  • சீக்ரெட் டிப்ஸ், இதோ!
45 வயதிலும் உடலை இளமையாக வைத்துக்கொள்வது எப்படி? ஜோதிகா சொல்லும் சீக்ரெட்! title=

Actress Jyothika Fitness Secrets : தமிழ் திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தவர், ஜோதிகா. 1999ஆம் ஆண்டு தனது 19 வயதில் திரையுலகிற்குள் நுழைந்த இவர், சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து ப்ரேக் எடுத்த பிறகு தற்போது மீண்டும் இந்தி-தமிழ்-மலையாளம் என மும்மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். அது மட்டுமன்றி, கடந்த சில நாட்களாக தனது வர்க்-அவுட் வீடியோக்களையும் போஸ்ட் செய்து வருகிறார். 

ஜோதிகாவின் வர்க்-அவுட் வீடியாே:

நடிகைகள் மட்டுமன்றி, கேமரா முன் நிற்பவர்கள் அனைவருமே தங்களை நன்றாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களின் உடலையும் முகத்தையும் நன்றாக பார்த்துக்கொள்வர். அப்படி இருக்கும் நடிகைகளுள், ஜோதிகாவும் விட்டுப்போகவில்லை. இவர், ஹீரோயினாக இருந்த போது சரியாக டயட்டை ஃபாலோ செய்து, தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆனாலும் இவரை பலர் கொழுக் மொழுக் கதாநாயகி என அழைத்ததுண்டு. சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து விட்டு வந்த பிறகும் ஜோதிகா, தனது உடலை பத்திரமாக பார்த்துக்கொள்கிறார். அதற்கு, அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியாேக்களே சான்று. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

இவர், ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிட்டிருந்த வீடியோவில் ஹெவி வர்க்-அவுட் செய்யும் க்ளிப்ஸ்களை இணைத்திருந்தார். அதிலும், அவை அனைத்திலுமே அவர்எக்கச்சக்க உழைப்பை போட்டு உடற்பயிற்சி செய்வது பதிவாகியிருந்தது. “உடற்தகுதி என்பது நீங்கள் இழக்கும் எடையைப் பற்றியது அல்ல, நீங்கள் அதன் மூலம் பெறும் வாழ்க்கையைப் பற்றியது” என்று குறிப்பிட்டிருந்தார். 

ஃபிட்னஸ் சீக்ரெட்..

ஜோதிகாவிற்கு தற்போது 45 வயதாகிறது. இருப்பினும் அவர் எப்படி தனது  உடலை இளமையாக வைத்திருக்கிறார் என பலருக்கு டவுட் இருந்தது. “அது சரி, ஜோதிகாவிற்கு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் ஆப்ஷன் இருக்கிறு, அதனால் செல்கிறார். வீட்டில் இருக்கும் நம்மால் என்ன செய்ய முடியும்?” என்று கூறுபவர்களும் சிலர் இருக்கின்றனர். உடல் எடையை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மிற்கு செல்வது மட்டுமல்ல, இன்னும் பல முயற்சிகள் உறுதுணை புரிகின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

சீரான பழக்க வழக்கம்:

நம்மில் பலர், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து விட்டு, இரண்டொரு நாட்கள் மட்டுமே வர்க்-அவுட் செய்து பின்னர் சோர்வாக இருக்கிறது என விட்டுவிடுவோம். இதைத்தான் செய்யக்கூடாது. ஜோதிகா, காலையில் தினசரி உடற்பயிற்சி, சரியான உணவு பழக்க வழக்கம் என்று அனைத்தையும் சரியாக கடைப்பிடிக்கிறார். இது, சுய ஒழுக்கமாக இருக்கும் ஒரு பழக்க வழக்கமாகும். 
விடாமுயற்சி வெற்றி தரும்..

உடல் எடையை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கு விடாமுயற்சி முக்கியம் என நினைப்பவர், ஜோதிகா. சினிமாவை விட்டு விலகியிருந்த நேரத்தில் அவர் கொஞ்சம் வெயிட் கெய்ன் செய்திருந்தார். இதையனைத்தையும் தனது விடாமுயற்சியினால்தான் குறைத்தார். தற்போது அவர், தனது ஃபிட்னஸ் பழக்க வழக்கங்களை தனது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாற்றியிருக்கிறார். 

காலையில் எழுந்தவுடன்..

நாம், ஒரு காலை பொழுதை எப்படி தொடங்குகிறோமோ, அதே போலத்தான் நமது பிற நாள் பொழுதுகளும் இருக்கும் என கூறப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் நாம் என்ன மனநிலையில் சில வேலைகளை செய்கிறோமோ, அதே போலத்தான் அந்த நாளின் பிற வேலைகளையும் செய்வோம். இதனாலேயே உடலை ஆக்டிவாக வைத்துக்கொள்ள தினசரி உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதை கடைப்பிடிக்கும் ஜோதிகா, காலையில் எழுந்தவுடன் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ள தவறுவதில்லை. 

மேலும் படிக்க | அசின் போல பளபளப்பான சருமம் வேண்டுமா..? அவரே கூறும் டிப்ஸ் இதோ..!

‘இதை’ பருகுங்கள்...

தனது காலை உடற்பயிற்சிகளை முடித்தவுடன் ஜோதிகா இளநீர் குடிப்பது வழக்கமாம். அப்படி இளநீர் குடிக்கவில்லை என்றால், ஒரு கப் கிரீன் டீ குடிப்பாராம்.

ஜிம் ட்ரெயினிங்:

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அவர் தினமும் ஜிம்மிற்கு செல்வதற்கு தவறுவதில்லையாம். வெயிட் லிஃப்டிங், ரோப் ட்ரெயினிங் உள்ளிட்ட பல உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் ஜோதிகா. 

நீச்சல் பயிற்சி..

நீச்சலடிப்பது நல்ல கார்டியோ உடற்பயிற்சியாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமன்றி, உடல் அழுத்தத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி, நீச்சல் பயிற்சியில் உள்ளது. மனதை கூல் செய்யவும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம், இது நல்ல மூச்சுப்பயிற்சியும் கூட. எனவே, ஜோதிகா நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்வாராம்.

நீர்ச்சத்து:

நாம், தேவையான தண்ணீர் குடித்தாலே போதும் எந்த நோயும் உடலை அண்டாது என பிறர் சொல்லி கேட்டிருப்போம். இது, மருத்துவ ஆராய்ச்சிகளால் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து கொள்வதால் உடல் மட்டுமன்றி சருமமும் சுத்தமாகும். தண்ணீர் மட்டுமே அதற்காக அடிக்கடி குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜூஸ், ஹெல்தி சோடா, பழச்சாறுகளாகவும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | த்ரிஷாவின் இளமையை காக்கும் டயட்! ‘இந்த’ உணவை மட்டும் சாப்பிடவே மாட்டாராம்!

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News