Coronavirus Update this Week: இந்த வாரம் 5.2 மில்லியன் பேருக்கு Corona பாதிப்பு – WHO

நேற்று கொரோனா பாதிப்பு 96,424 பேருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில்  கோவிட் -19 நோய்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.2 மில்லியனைத் தாண்டியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 19, 2021, 07:04 AM IST
  • மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு நாளை முதல் அமல்
  • ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு
Coronavirus Update this Week: இந்த வாரம் 5.2 மில்லியன் பேருக்கு Corona பாதிப்பு – WHO title=

புதுடெல்லி: நேற்று கொரோனா பாதிப்பு 96,424 பேருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில்  கோவிட் -19 நோய்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.2 மில்லியனைத் தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,174 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா சிகிச்சை எடுத்துக் கொள்ள மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

அம்மாநிலத்தில் 3,02,135 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 1,03,650, ஆந்திரா மாநிலத்தில் 88,197, உத்தரபிரதேசத்தில் 68,235, டெல்லியில் 31,721 பேருக்கு கோவிட் நோய் ஏற்பட்டுள்ளது.  

Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி

இம்மாதம் 17ஆம் தேதி வரை 6,15,72,343 COVID-19 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)) தெரிவித்துள்ளது. இவற்றில் 10,06,615 மாதிரிகள் நேற்று சோதனை செய்யப்பட்டன.

இந்த வாரம் இந்தியாவில் COVID-19 பாதிப்பு நிலவரம் என உலக சுகாதார மையம் தகவல் (World Health Organization) வெளியிட்டுள்ளது.

11 ஏப்ரல்: 169,914 (பதிவானவை)
12 ஏப்ரல்: 160,838 (பதிவானவை)
13 ஏப்ரல்: 185,297 (பதிவானவை)
14 ஏப்ரல்: 199,584 (பதிவானவை)
15 ஏப்ரல்: 216,828 (பதிவானவை)
16 ஏப்ரல்: 234,002 (பதிவானவை)
17 ஏப்ரல்: 260,895 (பதிவானவை)
18 ஏப்ரல்: 275,196 (பதிவானவை)

Also Read | புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News