Weight Loss Challenge: ஒரு மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்க தயாரா..!!

Weight Loss Tips:  1 மாதத்தில் 10 கிலோ  உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம். 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்கும் இலைக்கை எப்படி அடைவது என்று அறிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 16, 2023, 05:58 AM IST
  • ஒவ்வொரு நாளும் 10,000 அடிகள் நடக்க முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
  • 1.6 கிலோமீட்டர் நடந்தால், உங்கள் உடல் சுமார் 55 முதல் 140 கலோரிகளை எரிக்க முடியும்.
  • ஆரோக்கியமற்ற பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
Weight Loss Challenge: ஒரு மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்க தயாரா..!! title=

Weight Loss Challenge: தினமும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அடுத்த நாளுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டுபவர்கள் நம்மிடையே அதிகம். ஆனால் மறுநாள் காலை வந்ததும் சோம்பேறித்தனத்தால் அந்த திட்டங்களையெல்லாம் கை விட்டு விட்டு, நாளை பார்த்துக் கொள்ளலாம என விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், பல வகையான நோய்களின் கூடாரமாக உங்கள் உடலை மாற்ற நினைக்கிறீர்கள் என அர்த்தம். ஆம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்க விரும்பினால், முதலில் உங்கள் பழக்கத்தை மாற்றவும். கடுமையான உடற்பயிற்சி செய்யவோ அல்லது உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றவோ நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. ஆனால் தினமும் சில நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டும். ஆம், அதிக உடல் எடையை நடைப்பயிற்சி செய்வதன் மூலம் குறைக்கலாம் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் எடையை 10 கிலோ குறைக்க விரும்பினால், தினமும் சில நிமிடங்கள் நடக்கவும். இதை விரிவாக விவாதிப்போம்-

1 மாதத்தில் 10 கிலோ எடை குறைப்பது எப்படி? (How to lose 10 kg weight in 1 month?)

நடைப்பயிற்சி (Walking) மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். இந்த விஷயத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை. இருப்பினும், ஒவ்வொரு நபரும், அவரது உடல்வாகு மற்றும் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு வழிகளில் எடை இழக்கிறார்கள், ஏனென்றால் எடை இழக்காததற்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள் உடல் கலோரிகளை வேகமாக எரித்தால், உங்கள் எடை வேகமாக குறையும் (Weight Loss). அதே நேரத்தில், கலோரிகளை எரிக்க சிலருக்கு சிறிது கூடுதல் நேரம் எடுக்கும், எனவே எடை இழப்பு சிறிது தாமதமாகலாம்.

மேலும் படிக்க | Weight Loss Tips: 10 நாட்களில் 5 கிலோ எடை குறைக்கலாம், இதை மட்டும் செஞ்சா போதும்!!

எடை இழக்க, பல காரணிகளில் வேலை செய்ய வேண்டும். உடல் எடையை குறைக்க, நீங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும். இது தவிர, வேறு சில காரணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், அதாவது-

1. விறுவிறுப்பான உடற்பயிற்சியை தவறாமல் செய்யுங்கள்.

2. நடக்கும்போது, ​​நடையின் வேகத்தை மணிக்கு 6 கிலோமீட்டராக வைத்திருக்கவும்.

3. உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உணவில் (Weight loss Diet) கவனம் செலுத்துங்கள்.

4. வெளியில் இருந்து ஆரோக்கியமற்ற பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.

4. போதுமான தண்ணீர் குடிக்கவும்.

5. சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.

6. போதுமான அளவு தூங்கி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழுங்கள்.

இந்த எல்லா விஷயங்களிலும் கவனம் செய்வதன் மூலம், உங்கள் எடையை ஒரு மாதத்தில் 10 கிலோ வரை குறைக்கலாம். அதிலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவை கருத்தில் கொள்வதும், உணவு கட்டுப்பட்டை சிறப்பாக கடைபிட்ப்பதும் முக்கியம். இருப்பினும், இதனுடன் எடை அதிகரிப்பதற்கான வேறு காரணங்களையும் நீங்கள் ஆராய வேண்டும்.

மேலும் படிக்க | தொப்புளில் எண்ணெய் வைத்தால் ‘இந்த’ பிரச்சனைகள் நீங்கும்..! ட்ரை பண்ணி பாருங்க..!

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, நீங்கள் தினமும் 1 மைல் அல்லது 1.6 கிலோமீட்டர் நடந்தால், உங்கள் உடல் சுமார் 55 முதல் 140 கலோரிகளை எரிக்க முடியும். இருப்பினும், இது உங்கள் நடை வேகத்தைப் பொறுத்தது. அதே நேரத்தில், பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவையின் படி, நாம் தினமும் 150 நிமிடங்கள் மிதமான நடைபயிற்சி செய்ய வேண்டும். இருப்பினும், நீங்கள் வேகமாக நடந்தால், 75 நிமிடங்களில் அதைச் செய்யலாம்.இதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் 10,000 படிகள் நடக்க முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எத்தனை கிலோமீட்டர் தூரம் எத்தனை நாட்களில் நடந்தால் உடல் எடை குறையும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இதற்கு சரியான பதில் இல்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் எடை அதிகரிப்பதற்கு வெவ்வேறு காரணிகள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அவற்றின் எடை வெவ்வேறு வேகத்தில் குறையக்கூடும். சிலர் தினமும் 10000 படிகள் நடப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்கலாம். அதே நேரத்தில், உடல் எடையை குறைக்க 2 மாதங்கள் கூட எடுக்கும் சிலர் உள்ளனர். ஏனெனில் பல காரணிகள் இதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | அடிக்கடி சுடு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News