சூரத்: குஜராத்தின் பெஷ்தன் பகுதியில், கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
குஜராத் மாநிலம் பெஷ்தன் பகுதியில் நேற்று இரவு 86 காய தழும்புகளுடன் சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இந்த சிறுமி கடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த சிறுமியின் வயது 9-11 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என தெரிகிறது. கடந்த ஏப்ரல் 6-ஆம் நாள் அன்று அப்பகுதி கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இருக்கும் புதருக்குள் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இச்சிறுமியின் அங்க அடையாளங்களை கொண்டு அவரது தகவல்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கனேஷ் கௌகர் தெரிவிக்கையில்... சிறுமியின் உடலில் 86 கீறல்கள், காயத் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த சிறுமி கடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து தருபவர்களுக்கு ரூ.20000 பரிசு வழங்கப்படும் என குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. உன்னா, கத்துவா சம்பவங்கள் குறித்த போராட்டங்கள் நாடெங்கிலும் வெடித்து வரும் நிலையில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!