திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண் அலங்காரத்துக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திரைப் பிரபலங்களைப் போன்று திருமணத்தன்று மணப்பெண்கள் அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.
திருமணத்தில் மணப்பெண் ஜொலிக்க மேக்அப் டிப்ஸ்:-
> கிரீம் பேஸ் மேக் அப்பை விட, பவுடர் மேக் அப் போடுவது நல்லது. மேக் அப் போடுவதற்கு முன் ஐஸ்கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.
> பின்னர் நன்கு முகத்தை துடைத்துவிட்டு பவுண்டேஷன் சரிசமாக அப்ளை செய்ய வேண்டும். பவுண்டேஷன் போடும்போது கழுத்து, கைகள் வரை ஒரே சீராக போடப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.
> கண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது கலைநயத்துடன் வரைய வேண்டும். புடவையின் நிறத்திற்கேற்ப 'ஐ-ஷேடோ'வைத் தேர்ந்தெடுங்கள்.
> மெரூன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரியும். தோலில் அலர்ஜி ஏற்படாமல் இருக்க நல்ல தரமான மேக் அப் பொருட்களையே பயன்படுத்துங்கள்.
> உதடுகளில் லிப்ஸ்டிக் போடும்போது லிப் லைனருக்கு பிறகு லிப்ஸ்டிக் பூச வேண்டும். மேலும் அதே லைனர் கொண்டு உதட்டின் உள்புறமும் நிரப்புங்கள். பின் உதட்டின் உள்ளே லிப்ஸ்டிக்கை இடுங்கள். திஷ்யு பேப்பர் கொண்டு துடைத்து, மீண்டும் இடுங்கள். இதன்மூலம் உதட்டுச்சாயம் நீண்ட நேரத்துக்கு இருக்கும்.