கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர், கிருஷ்ணா ராஜ சாகர் அணையிலிருந்து 355 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 855 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
கடந்த சில வாரங்களாக கர்நாடகாவில் பருவமழை தீவிரமாக பெய்துவரும் சூழலில் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடகு மாவட்டத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு கூறி வந்தது.
இந்நிலையில், பருவமழை அதிகரிப்பு காரணமாக தற்போது கர்நாட அரசு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.