காங்கிரசில் இருந்து பதவி விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்!!
டெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தூண்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா புதன்கிழமை (மார்ச்-11) புதுதில்லியில் உள்ள கட்சியின் தலைமையக அலுவலகத்தில் பாரதீய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தார். இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடன் பேசிய சிந்தியா கூறுகையில்.... “பாஜக தலைவர் JP.நட்டா ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் என்னை தங்கள் குடும்பத்திற்கு அழைத்து, என்னை அந்த குடும்பத்தில் இணைத்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என கூறினார்.
மேலும், "இதுவரை எனது வாழ்க்கையை மாற்றும் 2 நிகழ்வுகள் நடந்துள்ளன - அதில், ஒன்று... நான் என் தந்தையை இழந்த நாள் மற்றும் இரண்டாவது, நேற்று நான் என் வாழ்க்கைக்கு ஒரு புதிய பாதையைத் தேர்வு செய்ய முடிவு செய்தது" என்று அவர் கூறினார். கடந்த 18 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்ய முயற்சித்து வருகிறேன். காங்கிரஸ் நிலையை நினைத்து எனக்கு கவலையாக உள்ளது. காங்கிரசால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. பாதையை இழந்து திணறி தவிக்கிறது. ஆனால், உண்மையை புரிந்து கொள்ள காங்கிரஸ் தயாராக இல்லை. எதார்தத்தை அக்கட்சி புரிந்து கொள்ளவில்லை. ஆரம்பிக்கப்பட்ட போது, இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை. புது தலைமை, எனக்கு காங்கிரசில் வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் புது கொள்கைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பது கிடையாது.
சிந்தியாவும் தனது முன்னாள் காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். காங்கிரஸ் கட்சி முன்னாள் இருந்ததை போன்று தற்போது இல்லை எனவும் அவர் கூறினார். "நான் காங்கிரஸ் கட்சி மூலம் எனது மாநிலத்துக்காகவும் எனது தேசத்துக்காகவும் பணியாற்றியுள்ளேன். ஆனால், கட்சி இப்போது பழைய மாதிரியாக இல்லை, விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வேலை வழங்குவதாக காங்கிரஸ் கூறியது. தற்போது, மாபியாக்கள் மாநிலத்தை நிர்வகித்து வருகின்றனர்" என்று சிந்தியா கூறினார்.
Jyotiraditya Scindia: I can say with confidence that the aim of public service is not being fulfilled by that party (Congress). Besides this, the present condition of the party indicates that it is not what it used to be. pic.twitter.com/AGTK1zZwbe
— ANI (@ANI) March 11, 2020
பல ஆண்டுகளாக தனது முன்னாள் கட்சியை விட்டு வெளியேற அவரை கட்டாயப்படுத்திய காரணங்கள் மற்றும் அவர் ஏன் குங்குமப்பூ முகாமில் சேர முடிவு செய்தார் என்பதற்கான காரணங்களை சிந்தியா கூறினார். '' பொது சேவையின் நோக்கம் அந்தக் கட்சியால் (காங்கிரஸால்) நிறைவேற்றப்படவில்லை என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். இது தவிர, கட்சியின் தற்போதைய நிலை, அது முன்பு இருந்ததல்ல என்பதைக் குறிக்கிறது" என்றார்.
இந்நிலையில், மத்திய பிரதேச சட்டமன்றத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு பாஜகவின் பிரிதிவிராஜ் சிங் சவுகான் 4 ஆவது முறையாக முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை எம்.பி. யாகி. மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.