கோவாவின் வளர்ச்சியை தடுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கு எதிராக வெகுஜென போராட்டம் நடத்தியதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்!!
கோவாவின் மோப்பா பீடபூமியில், க்ரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்க கோரி வழக்குபதிவு தொடர்ந்திருக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கு எதிராக வெகுஜென போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் கோவா மாநிலத்தில், க்ரீன்ஃபீல்ட் விமான நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருந்ததை அடுத்து, கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்க கோரி, கோவா மாநிலத்தை சேர்ந்த பல அரசு சாரா அமைப்புகள் வழக்குபதிவு செய்திருந்தனர்.
இது குறித்து கூறிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், "முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் கோவாவிற்கு பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். அதற்காகவே, இந்த க்ரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் வேகமாக கொடங்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு தடைவிதிக்க கோரி வழக்குபதிவு செய்திருக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கு எதிராக வெகுஜென போராட்டம் மேற்கொள்ள முடிவுசெய்துள்ளோம்" என்று கூறியுள்ளார். மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், மியூசிக் பண்டிகைகளும் கொண்டாடுமாறு கோவா மக்களுக்கு ஓர் கோரிக்கையை முன்வைத்துள்ளார் பியூஷ் கோயல்.