மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையின் விரிவாக்கம் திங்கள்கிழமை (டிசம்பர் 30) நடைபெற உள்ளது, அமைச்சரவையில் ஆதித்யா தாக்கரேவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
சிவசேனா வாரிசான ஆதித்யா தாக்கரே உயர்கல்வி அமைச்சகம் அல்லது சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றைப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு மகாராஷ்டிரா ஆளுநர் BS கோஷ்யரி அவர்களால் அமைச்சரவை அமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட மொத்தம் 36 அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சியை சேர்ந்த 13-13 தலைவர்கள் என 36 பேர் திங்கள்கிழமை பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. எனினும் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக NCP தலைவர் அஜித் பவார் பதவியேற்பாரா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை. பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னரே அனைத்து யூகங்களுக்கும் முடிவு கிடைக்கும்.
காங்கிரஸ் ஒதுக்கீட்டைச் சேர்ந்த 10 தலைவர்களில் 8 பேர் அமைச்சரவை அமைச்சர்களாகவும், 2 பேர் மாநில அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் தலைவர்கள் பட்டியலில் அசோக் சவான், அமித் தேஷ்முக், அஸ்லம் ஷேக், யஷோமதி தாக்கூர், வர்ஷா கெய்க்வாட், சுனில் கேதார், கே.சி.பட்வி மற்றும் விஜய் வதேட்டிவார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விஸ்வாஜித் கதம் மற்றும் சதேஜ் பாட்டீல் ஆகியோர் மாநில அமைச்சராக பதவியேற்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குலாப் ராவ் பாட்டீல், அப்துல் சத்தார், தாதா பூசெம் சஞ்சய் ரைமுல்கர், பச்சு காடு, ராகுல் பாட்டீல், ராகுல் பாட்டீல், பிரதீப் ஜெய்ஸ்வால், சீனிவாஸ் வாங்கா, ரவீந்திர வைக்கர், சுனில் ரவுத், தனாஜி சாவந்த், ஷம்புராஜர் ஜீசாவ் மற்றும் சஞ்சய் ரத்தோட் ஆகியோர் சிவசேனா ஒதுக்கீட்டில் அமைச்சர்களாக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
NCP-யில் இருந்து, இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள தலைவர்கள் பட்டியலில் அஜித் பவார், திலீப் வால்ஸ் பாட்டீல், ராஜேஷ் டோப், அனில் தேஷ்முக், ராஜேந்திர சிக்னே, நவாப் மாலிக், ஜிதேந்திர அஹ்வாத், தனஞ்சய் முண்டே, பாலாசாகேப் பாட்டீல், தத்தா பாரேன் மற்றும் அதிதி தட்கரே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
காங்கிரசின் பாலாசாகேப் தோரத் மற்றும் நிதின் ரவுத், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுபாஷ் தேசாய் மற்றும் NCP-யின் ஜெயந்த் பாட்டீல் மற்றும் சாகன் புஜ்பால் ஆகியோர் ஏற்கனவே நவம்பர் 28 அன்று முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் NCP ஆகியோரால் இறுதி செய்யப்பட்ட சூத்திர ஒப்பந்தம், சிவசேனாவில் 16 அமைச்சர்கள் (முதலமைச்சரைத் தவிர), NCP 14 மற்றும் காங்கிரஸ் 12 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.