தேர்தல் ஆணையம் தேர்தலில் நேர்த்தியை உறுதி செய்ய வேண்டும்: HC-யில் திமுக கோரிக்கை

தங்கள் கட்சி மூலம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், தேர்தலில் தூய்மையை உறுதி செய்வதையும் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்யவே விடுக்கப்பட்டுள்ளன என்று திமுக ஆலோசகர் நீதிபதிகளிடம் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 24, 2021, 07:00 PM IST
  • 15 ஆண்டுக்கு மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்-திமுக.
  • அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவின் போது சி.சி.டி.வி லைவ் கவரேஜ் / வெப் ஸ்ட்ரீம் வேண்டும்-திமுக.
  • ஈ.வி.எம் கள் சேமித்து வைக்கப்பட்டும் அறையைச் சுற்றி ஜாமர்கள் நிறுவப்பட வேண்டும்-திமுக.
தேர்தல் ஆணையம் தேர்தலில் நேர்த்தியை உறுதி செய்ய வேண்டும்: HC-யில் திமுக கோரிக்கை title=

ஏப்ரல் 6 நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 15 ஆண்டு காலம் என்ற காலாவதி அளவிற்கு அப்பாற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று திமுக திங்களன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. 

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேறு சில கோரிக்கைகளையும் விடுத்துள்ளார். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் (Polling Booths) வாக்களிக்கும் போது சி.சி.டி.வி லைவ் கவரேஜ் / வெப் ஸ்ட்ரீம் வழங்குவது, ஈ.வி.எம். இருக்கும் அறைகள் மற்றும் வாக்கெண்ணிக்கை நடக்கும் மையங்களில் ஜாமர்களை வைப்பது ஆகியவை இவற்றில் சிலவாகும். 

வி.வி.பி.ஏ.டி.-களில் குறைந்தது 50 சதவீதத்தை ஒரே நேரத்தில் எண்ணுமாறு ரிட்டர்னிங் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டது. திமுக மூத்த வழக்கறிஞர் பி வில்சனின் ஆரம்ப வாதங்களை கேட்டபின், தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் முதல் பெஞ்ச் தேர்தல் ஆணையத்திற்கு (Election Commission) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. சிசிடி காமராக்களை நிறுவவும், தேர்தல் செயல்முறையை பதிவு செய்யவும், உணர்திறன் கொண்ட வாக்குச்சாவடிகளை கண்டறியும் பொருட்டு அனைத்து கட்சிகளுடனும் உடனடியாக ஒரு கூட்டத்தை கூட்டுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

ALSO READ: Tasmac Shops Close: தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: தேர்தல் ஆணையம்

15 ஆண்டுகளை விட பழைய ஈ.வி.எம்-களின் பயன்பாட்டை தேர்தல் ஆணையம் அகற்றுமா என்றும் நீதிபதிகள் யோசித்து வருகின்றனர்.

ஈ.வி.எம் கள் (EVM) சேமித்து வைக்கப்பட்டும் அறையைச் சுற்றி ஜாமர்களை நிறுவ முடியுமா என்று ஆராயவும் பெஞ்ச் தேர்தல் ஆணையத்திடம் கூறியது. VVPAT களை எண்ணுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதால், ​விதிகளின்படி இது அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தங்கள் கட்சி மூலம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், தேர்தலில் தூய்மையை உறுதி செய்வதையும் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்யவே விடுக்கப்பட்டுள்ளன என்று திமுக ஆலோசகர் நீதிபதிகளிடம் கூறினார்.

ALSO READ: TN Elections 2021: தமிழகதில் ஏப்ரல் 6 ஆம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு:

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News