நீர் ராசிக்குள் நுழையும் புதன்! மூளை வெப்பத்தை தணிக்கும் கடகம்! புத்திசாலிகளுக்கு கொண்டாட்டம்!

Mercury In Cancer : கடக ராசியில் புதன் பெயர்ச்சியாவது நல்லதா கெட்டதா என்ற கேள்விகள் எழலாம். அறிவுக்காரகர் புதன், நீர் ராசியான கடகத்தில் செல்வது மனதை சாந்தப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், மனநிம்மதி அதிகரிக்கும். அதிலும் ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் இருந்தால் புத்திசாலி என்ற பெயரைப் பெற்றுக் கொடுக்கும். 

மருத்துவம், ஜோதிடம், ஆயுர்வேதம், ஆன்மிகம், கற்பித்தல், மக்கள் தொடர்புத் துறை உட்பட பிறருக்கு உதவும் துறையில் இருப்பவர்களை  சிறப்பாகச் செயல்பட வைக்கும் பெயர்ச்சி இது. 

1 /8

வணிக சிந்தனை கொண்ட கிரகமான புதன், நீரின் ராசியான கடகத்திற்கு பெயர்ச்சியாவது 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்

2 /8

கூலான கடக ராசி, புத்திசாலியான புதனுடன் சேரும்போது, தேவையில்லாத அழுத்தங்களை மனதில் இருந்து நீக்கும். புத்திசாலித்தனத்துடன் சிந்திக்க மனதை அமைதிப்படுத்தும்.    

3 /8

கடக ராசியில் புதன் சஞ்சாரம், கற்றல் மற்றும் கைவினைத்திறன்கள் துறைகளில் இருப்பவர்களை மேலும் பிரபலமடைய வைக்கும்

4 /8

மிதுன ராசி: தர்க்கரீதியான சிந்தனையில் சிறந்தவர்களாக மாற்றும் புதன் பகவான், கடக ராசியில் இருக்கும்போது, மிதுன ராசிக்காரர்களின் சிந்தனை விரிவடையும். அனைவரும் நம்முடையவர்களே என்ற எண்ணத்தால் பிறருக்கு உதவி செய்து நல்ல பெயர் வாங்கும் காலமாக இருக்கும்

5 /8

கடக ராசிக்காரர்கள், மூளை சார்ந்த பேச்சை விட இதயம் சார்ந்த தொடர்பை விரும்புபவர்கள். அவர்களின் சொந்த ராசியிலேயே புதன் வருவதால், அன்புடன் புத்திசாலித்தனமும் சேர்ந்து பிறரை கவரும் விதமாக பேசுவீர்கள். நாலு வார்த்தை நல்லா பேசினா நல்லது நடக்கும் என்பதை புரிய வைக்கும் புதன் பெயர்ச்சியாக இருக்கும்

6 /8

விருச்சிகம்: புதனின் கடக ராசி சஞ்சாரம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சட்ட சிக்கல்களில் இருந்து நிவாரணம் தரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி மனம் சாந்தியடையும்

7 /8

 மீனம்: புதன் கிரகத்தின் ஆசி பெற்ற மீன ராசிக்காரர்கள் பிறருடன் இணக்கமாக இருப்பீர்கள், இருந்தாலும், கடகத்தில் புதன் பெயர்ச்சியால் ஆழமான விஷயங்களைப் பற்றி பேசுவீர்கள். இது உங்களின் மதிப்பை உயர்த்தும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது