மகாராஷ்டிரா, ஹரியானா இரண்டிலும் பாஜக-NDA தொடர்ந்து முன்னிலை..!

விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதம்..!

Last Updated : Oct 24, 2019, 10:01 AM IST
மகாராஷ்டிரா, ஹரியானா இரண்டிலும் பாஜக-NDA தொடர்ந்து முன்னிலை..! title=

24 October 2019, 8:44 AM  

மகாராஷ்டிராவில் பாஜக 124 இடங்களிலும், காங்கிரஸ் 48 இடங்களிலும் முன்னிலை

ஹரியானாவில் பாஜக 55 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் முன்னிலை


விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதம்..!

தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் உள்ள 51 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மகாராஷ்ட்ராவின் சதாரா, பீகாரின் சமஸ்திரிபுர் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ., 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டு எண்ணிக்கை துவங்கிய முதல் 10 நிமிடங்களிலேயே பா.ஜ.க 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

 

Trending News