தேசிய தகுதித் தேர்வான NET தேர்வுக்காக விண்ணப்பதாரர்கள் டிசம்பர்2020 தேர்வு தேதிக்காகக் காத்திருக்கிறார்கள். கடந்த 10 மாதங்களில், UGC NET நான்கு முறை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. யுஜிசி நெட் டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021 தற்போது ஒரே தேர்வாக நடைபெற உள்ளது. இருப்பினும், தேர்வு நடைபெறும் தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.
கொரோனா முதல் அலை முடித்த பின்னர் மற்ற நுழைவுத் தேர்வுகளுடன் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் ஒத்து போவதால் தேர்வை நடத்தும் அமைப்பான என்டிஏ தேர்வை மாற்றியமைத்தது. பல ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, தேர்வு அக்டோபர் 17 முதல் 25 வரை நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும் தற்போது மறு அறிவிப்பு வரும் வரை மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இறுதி தேர்வுக்கான தேதிகள் முடிவு செய்யப்படவில்லை. இது நெட் தேர்வுக்காக காத்திருக்கும் பலரை கவலையடையச் செய்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் இப்போது சமூக ஊடகங்களில் தங்கள் கவலைகளை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். தேர்வுத் தேதிகளை விரைவில் வெளியிடுமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்வுகளுக்கு 10-15 நாட்களுக்கு முன் அனுமதி அட்டைகளை வெளியிடுமாறும் அவர்கள் யுஜிசியிடம் கூறியுள்ளனர். தேர்வுகளுக்கு முன்பாக தங்களுக்கு 30 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும், திடீரென நடத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். நெட் தேர்வு தேதிகளைக் அறிவிக்க கோரி விண்ணப்பதாரர்கள் #ReleaseNETEXAMDATE என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் யுஜிசியுடன் இணைந்த கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பதவிக்கு தகுதி பெறுவார்கள். தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று என்டிஏ ஒரு அறிவிப்பில் கூறியிருந்தது.
NET exam has not been conducted from last year December. @DG_NTA
has already merged December 2020 cycle and June 2021 cycle. Exam has been postponed two times and still @DG_NTA
is not releasing date for UGC NET.#ReleaseNETEXAMDATE#UGCNET@dpradhanbjp@DG_NTA@EduMinOfIndi
— Swapnil Wanjare (@horcrux_888) October 21, 2021
I request @DG_NTA and @ugc_india to release the datesheet of NET at least 25-30 days and admit card 10-15 days before the exam so that students can make necessary arrangements.
Last minute surprises can lead to academic pressure.
Thanks! #NTA #UGCNET— Shashank (@pragmatikperson) October 18, 2021
NET exam has not been conducted from last year December. @DG_NTA has already merged December 2020 cycle and June 2021 cycle. Exam has been postponed two times and still @DG_NTA is not releasing date for UGC NET.#ReleaseNETEXAMDATE@dpradhanbjp@HansrajMeena @Bablu_Singh97
— Arun Raj (@arunraj_jnu) October 21, 2021
ALSO READ மொபைலில் நாள் ஒன்றுக்கு நாம் செலவழிக்கும் நேரங்கள்! அதிர்ச்சியூட்டும் தகவல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR