ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாது. 641 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சேனல் மேனேஜர், மேற்பார்வையாளர், உதவி அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதாவது ஜூன் 7 ஆம் தேதி கடைசி தேதியாகும். தகுதியான நபர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்துக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | Bank Holidays in June 2022: ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது
காலிப் பணியிடங்கள்
சேனல் மேனேஜர் ஃபெசிலிடேட்டர் - 503
சேனல் மேனேஜர் சூப்பர்வைசர் - 130
சப்போர்ட் ஆபிஸர் - 8
வயது வரம்பு; அறிவிக்கப்பட்டுள்ள சேனல் மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்களின் வயது 60 முதல் 63-க்குள் இருக்க வேண்டும்.
SBI வேலைவாய்ப்பு 2022: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
1. முதலில் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in பக்கத்துக்கு செல்ல வேண்டும்
2. பிறகு ஹோம் பேஜில் உள்ள கேரியர் (Career) என்கிற ஆப்சனை கிளிக் செய்யவும்.
3. அங்கு இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு விண்ணப்பத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதில் அப்ளை லிங்கை கிளிக் செய்யுங்கள்
மேலும் படிக்க | Railway Recruitment 2022: ரயில்வேயில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 27
4. கேட்கப்படும் சான்றுகளுடன் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்
5. ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
6. விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டவுடன் விண்ணப்பித்த நகல் ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க; எஸ்.பி.ஐ வேலைவாய்ப்பு லிங்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR