2020 JEE Advanced நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் IITயில் ஏன் சேரவில்லை?

JEE Advanced 2020 நுழைவுத் தேர்வில் 396க்கு 352 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பிடித்த Chirag Falor IITயில் சேரவில்லை என்று சொல்லி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2020, 12:17 AM IST
2020 JEE Advanced நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் IITயில் ஏன் சேரவில்லை? title=

புதுடில்லி: JEE Advanced 2020 நுழைவுத் தேர்வில் 396க்கு 352 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பிடித்த சிராக் ஃபாலோர் (Chirag Falor) IITயில் சேரவில்லை என்று சொல்லி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இந்திய தொழில்நுட்ப நிறுவனமான IITயின் எந்தவொரு கல்லூரியிலும் சேரப் போவதில்லை என்று சிராக் ஃபாலோர் முடிவு செய்துள்ளார். புனேவை சேர்ந்த இந்த மாணவர் JEE Advanced நுழைவுத் தேர்வில் 396க்கு 352 மதிப்பெண்களைப் பெற்றார். 

நுழைவுத் தேர்வில் கலந்துக் கொண்ட ஒரு லட்சம் மாணவர்களில் முதல் இடத்தைப் பிடித்தாலும், ஐ.ஐ.டி.யில் சேர்வதற்காக கடினமாக உழைத்திருந்தாலும், தற்போது அந்த வாய்ப்பு கைக்கு வந்ததும் அதை நிராகரித்ததற்கான காரணம் என்ன?

சிராக் ஃபாலோர் (Chirag Falor) என்ற இந்த புத்திசாலி மாணவனுக்கு  அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) (Massachusetts Institute of Technology (MIT)) இல் படிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

"எனக்கு Massachusetts Institute of Technology இல் படிக்க இடம் கிடைத்துவிட்டது.  அங்கு வகுப்புகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன, நான் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கிறேன். JEE Advanced 2020 தேர்வுகளுக்காக நான் நான்கு ஆண்டுகளாக தயார்படுத்திக் கொண்டிருந்தேன், எனவே தேர்வில் கலந்துக் கொள்ளாமல் இருக்க விரும்பவில்லை" என்று Falor கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் மேற்கோளிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஆன்லைனில் MIT வகுப்புகளில் கலந்துகொண்டதாகவும், பின்னர் பகலில் ஐஐடி தேர்வுகளுக்குத் தயாராகி வந்ததாகவும் சிராக் ஃபாலோர் கூறினார்.

"எம்.இ.டி.யில் தேர்வை விட ஜே.இ.இ கடினமாக இருந்தது. இந்தத் தேர்வில் கலந்துக் கொண்டது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது" என்று சிராக் ஃபாலோர் தெரிவித்திருக்கிறார்.

JEE Advanced 2020: முதல் 10 இடங்களை பிடித்தவர்கள்:
Rank 1: Chirag Falor

Rank 2: Gangula Bhuvan Reddy

Rank 3: Vaibhav Raj

Rank 4: R Muhender Raj

Rank 5: Keshav Agarwal

Rank 6: Hardik Rajpal

Rank 7: Vedang Dhirendra Asgaonkar

Rank 8: Swayam Shashank Chube

Rank 9: Harshavarshan Agarwal

Rank 10: Dhvanit Beniwal

ஐ.ஐ.டி ரூர்க்கியைச் சேர்ந்த கனிஷ்கா மிட்டல் என்ற மாணவி 17வது இடத்தைப் பிடித்தார்.

திங்கட்கிழமையன்று, ஐ.ஐ.டி டெல்லி JEE (Advanced) 2020 முடிவை அறிவித்தது.  மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ட்வீட்டர் மூலம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். விரும்பிய தரத்தைப் பெற முடியாத மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் ஆறுதல் போக்ரியால் கூறினார். "ஒரு தேர்வு மட்டுமே ஒருவரை வரையறுக்க முடியாது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

JEE Advanced 2020 செப்டம்பர் 27 அன்று ஐ.ஐ.டி டெல்லியால் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது. கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், ஒரு லட்சம் பேர் JEE Advanced 2020 தேர்வில் கலந்துக் கொண்டனர். IIT Delhi மதிப்பெண்கள் பட்டியலுடன் அகில இந்திய தரவரிசைகளையும் (All India Rankings) வெளியிட்டது.

இதுவும் பயனுள்ள செய்தி | School News Update: தமிழகத்தில் 10-12 ம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளிப்போகுமா..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News