Education: கூலித் தொழிலாளியின் மகன் IITயில் படிக்க தமிழக அரசு நிதியுதவி

கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன், ஐஐடியில் உயர் கல்வி கற்க தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 28, 2021, 05:06 PM IST
Education: கூலித் தொழிலாளியின் மகன் IITயில் படிக்க தமிழக அரசு நிதியுதவி title=

சென்னை: தமிழ்நாட்டில், அரசுப் பள்ளியில் படித்து, ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் அருண்குமாரின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன், ஐஐடியில் உயர் கல்வி கற்க தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்கிறது.

கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகனின் ஐஐடி படிப்புச் செலவுக்கு தமிழ்நாடு அரசு உதவியளிக்கும் என மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் படித்த மாணவர் அருண்குமார் (Arunkumar) ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஐஐடியில் படிக்க இடம் கிடைத்தாலும், அதற்கான செலவை செய்வது, கூலித் தொழிலாளியான தந்தைக்கு சிரமம் என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, மேலும் பல ஏழை மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.. இந்த செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள முதலமைச்சர், "அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி பொறியியல் படிப்பில் சேரும் திருச்சி, கரடிப்பட்டி கிராமத்து மாணவர் அருண்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டினேன். எளிய பின்புலத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் அருண்குமாரின் கல்விச் செலவை அரசே ஏற்கும். இலட்சியக் கனவுகளுடன் பயணிப்பவர்களுக்கு அரசு துணை நிற்கும்!"” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டி கிராமத்தில் (Karadipatti village) ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அருண்குமார் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு, ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது.

இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் ஐஐடி கல்வி அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. ஐஐடிகளுக்கான பல-நிலை நுழைவுத் தேர்வு முறை, இந்தியாவில் உள்ள கடினமான கல்வித் தேர்வுகளில் ஒன்றாகும். ஆண்டொன்றுக்கு மொத்தம் 16,000 மாணவர்கள் ஐஐடியில் படித்து வெளியேறுகின்றனர்.

இந்த தரமான கல்வி நிறுவனத்தில் சேர்ந்து கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எனவே, இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள், ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் கலந்துக் கொள்கின்றனர்.  

Also Read | மருத்துவ வசதியற்ற கூடலூருக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையை மாற்ற வேண்டும்: சீமான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News