TCS Job Opportunities: இந்தியாவைச் சேர்ந்த டாடா கன்சல்டண்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம், இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட நிறுவனம். மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள மென்பொருள் சேவைகள் வழங்கும் இந்த சேவை நிறுவனம், தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக உலகளாவிய சிறந்த பணியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடைமுறைகளில் சிறந்து விளங்குவதற்காக இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 11 உலகளாவிய சிறந்த நிறுவனங்களில் டிசிஎஸ் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம், பணியமர்த்துவதற்கு ஒருங்கிணைந்த சோதனை முறையைப் பின்பற்றுகிறது. அதற்கான தேர்வுக்கு விண்ணப்பித்து, அதில் கலந்துக் கொள்ளும் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில், அவர்கள் நேர்காணலுக்கு தகுதி பெறுவார்கள்.
மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்
உங்கள் திறமையைக் காட்டவும், உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கவும், வளமான வாழ்க்கையை உருவாக்கவும் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் டிசிஎஸ்ஸின் தேசிய நுழைவுத்தேர்வில் எப்படி கலந்துக் கொள்வது? எவ்வாறு வேலை பெறுவது?
TCS NQT எனப்படும் இந்த நுழைவுத்தேர்வு, இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கான இந்தத் தேர்வுகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இளங்கலை தொழில்நுட்பம் (B.Tech.) / இளங்கலை பொறியியல் (B.E.) / முதுகலை தொழில்நுட்பம் (M.Tech.) / Master of Engineering (M.E. ) / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் வழங்கும் முதுகலை கணினி பயன்பாடுகள் (M.C.A.) / முதுகலை அறிவியல் (M.Sc. / M.S.).
மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?
எப்படி விண்ணப்பிப்பது?
படி 1. TCS போர்ட்டலில் உள்நுழைக
படி 2. டிரைவில் பதிவு செய்து விண்ணப்பிக்கவும்
நீங்கள் ஏற்கனவே பதிவுசெய்திருந்தால், உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும். சமர்ப்பித்தவுடன், "Driveக்கு விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா பிரசாந்த் கிஷோர்! ஜன் சூரஜ் யாத்திரை சர்ச்சை
நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால், இப்போது பதிவு செய்யுங்கள் என்பதைக் கிளிக் செய்து, "IT" என வகையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் விவரங்களை நிரப்பவும். உங்கள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, "Driveக்கு விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்
படி 3. உங்கள் சோதனை முறையை (இன்-சென்டர் அல்லது ரிமோட்) தேர்ந்தெடுத்து, அப்ளை என்பதைக் கிளிக் செய்யவும்
ஒருமுறை விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டால், அதில் மாற்றங்கள் அனுமதிக்கப்படாது என்பதால், விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக கவனமாக விவரங்களை சரிபார்க்கவும்.
முக்கியமான குறிப்பு:
அனைத்து கல்வி ஆவணங்களின் அசல் பிரதி உங்களிடம் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | திருப்பூரில் அரசு வேலைக்கான வாய்ப்பு! நேரடி நேர்காணல் மூலம் பணி நியமனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ