Dec 3: 2021 பொதுத் தேர்வுகள், NEET, JEE பற்றிய பெரிய அறிவிப்பு: கல்வி அமைச்சகம்

அடுத்த ஆண்டு எவ்வாறு, எப்போது தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2020, 11:29 AM IST
  • மத்திய கல்வி அமைச்சர் டிசம்பர் 3 ஆம் தேதி நேரலையில் மாணவர்களுடன் பேசுவார்.
  • பொதுத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் குறித்து இதில் பேசப்படும்.
  • மத்திய கல்வி அமைச்சகம் இந்த செய்தியை தெரிவித்தது.
Dec 3: 2021 பொதுத் தேர்வுகள், NEET, JEE பற்றிய பெரிய அறிவிப்பு: கல்வி அமைச்சகம் title=

புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2021 ஆம் ஆண்டின் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எப்போது நடத்தும் என்பது குறித்த வளர்ந்து வரும் ஊகங்களுக்கு மத்தியில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் டிசம்பர் 3 ம் தேதி நண்பகல் மாணவர்களுடன் உரையாடுவார் என செய்திகள் வந்துள்ளன. கல்வி அமைச்சர் JEE 2021, NEET 2021 உள்ளிட்ட வரவிருக்கும் நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு பொதுத் தேர்வுகள் குறித்து பேசுவார்.

இது குறித்த சந்தேகம் உள்ளவர்கள் #EducationMinisterGoesLive என்ற hashtag-ஐப் பயன்படுத்தி ட்விட்டரில் தங்கள் கேள்விகளை அனுப்பலாம்.  “மாணவர்களே, மத்திய கல்வி அமைச்சர் டிசம்பர் 3 ஆம் தேதி நேரலையில் வந்து, வரவிருக்கும் பல்வேறு பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் குறித்து உங்களுடன் பேசுவார். இது குறித்த உங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டாகை பயன்படுத்தி அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று கல்வி அமைச்சகம் ட்வீட் செய்தது.

அடுத்த ஆண்டு எவ்வாறு, எப்போது தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் (Ramesh Pokhriyal Nishank) தெரிவித்திருந்தார். "அடுத்த ஆண்டு எவ்வாறு, எப்போது தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற கல்வி அமைச்சினால் ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும்" என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

ALSO READ: 2021 ஆம் ஆண்டின் 10, 12, NEET, JEE தேர்வுகளை தள்ளிப்போடுமா CBSE?

​​உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு பொதுத் தேர்வுகள் முக்கியம் என்பதால் அவை கண்டிப்பாக நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தியிருந்தார். "தேர்வுகளை நடத்துவது ஒரு சவாலுக்கு சமமானதுதான். COVID19 தொற்றுநோய் காரணமாக நிச்சயமற்ற தன்மை இருக்கும் போதிலும், உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு, பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை நடத்துவது முக்கியம். இது தொடர்பாக நான் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து வருகிறேன். பரஸ்பர முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும்" என்று நிஷாங்க் கூறியிருந்தார்.

பொதுவாக, CBSE, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதித் தாளை டிசம்பரில் வெளியிட்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தேர்வுகளை நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால் CBSE வழக்கமான முறையில் தேர்வுகளை நடத்த முடியாமல் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், டேட் ஷீட்டை CBSE நவம்பர் மாதம் வெளியிட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் 8 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருப்பதால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2021 ஆம் ஆண்டு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை (Board Exams) ஏப்ரல்-மே மாதங்கள் வரை தள்ளி வைக்கக்கூடும் என சில அறிக்கைகள் தெரிவித்தன.

ALSO READ: திருத்தப்படுகிறதா 2021 JEE Main, NEET syllabus: என்ன கூறுகிறது கல்வி அமைச்சகம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News