கோல்டு கோஸ்ட்: மகளிர்பளுதூக்குதல் போட்டியில் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ்-க்கு தங்க பதக்கம் வென்றார். இது பளு தூக்குதலில் இந்தியாவிற்கு கிடைத்த 5-வது தங்கம் ஆகும்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகளிர் பிரிவில் 69 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டியில் இந்திய வீராங்கனை பூனம்யாதவ் தங்கப்பதக்கம் வென்றார். முன்னதாக,பளுதூக்குதலில், 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சிகோம் மிராபாய் சானு, 53 கிலோ எடை பிரிவில் சஞ்சிதா சானு தங்கம் வென்றனர்.
முன்னதாக.....
> கடந்த ஏப்ரல் 5-ஆம் நாள், மகளிருக்கான பளுதூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்க பதக்கம் வென்றார்.
> கடந்த ஏப்ரல் 6-ஆம் நாள், மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்றார்.
> நேற்று ஏப்ரல் 7, காலை ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் தங்க பதக்கம் வென்றார்.
> நேற்று ஏப்ரல் 7, ஆடவருக்கான பளுதூக்குதல் 85 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வெங்கட் ராகுல் ராகலா தங்க பதக்கம் வென்றுள்ளார்.
> இந்நிலையில் இன்று மகளிர்பளுதூக்குதல் போட்டியில் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ்-க்கு தங்க பதக்கம் வென்றார்.
தற்போதைய காமன்வெல்த் போட்டி நிலவரப்படி இந்தியா 5 தங்கப்பதங்களை வென்றுள்ளது. தங்கம் வென்றுள்ள பூனம் யாதவ் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவராவார் என்பது குறிப்பிடதக்கது....!
தங்கம் வென்ற பூனம் யாதவ்விற்கு ஜனாதிபதி ராம்கோவிந்த் பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.