Devotional: வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள் எவை?

சைவ மரபை பின்பற்றி எம்பெருமான் சிவனை வணங்குபவர்களுக்கு கடல் சங்கமிக்கும் இடங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 5, 2021, 06:48 AM IST
  • வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவாலயம் திருநல்லூர்
  • அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டிய இடம்
  • குந்திதேவியின் பாவத்தை போக்கிய முக்தித்தலம்
Devotional: வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள் எவை?  title=

புதுடெல்லி: சைவ மரபை பின்பற்றி எம்பெருமான் சிவனை வணங்குபவர்களுக்கு கடல் சங்கமிக்கும் இடங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை.  

அவற்றில், திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகியவை ஏழுர்த்தலங்கள் என்று அறியப்படுகின்றன. திருநல்லூர் என்ற தலம் அனைத்திலும் முதலிடம் பெறுவது ஏன் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக் கண்டு ஆனந்தம் அடைவதற்காக அனைத்து உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார்.

Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 மார்ச் 05ஆம் நாள், மாசி 21, வெள்ளிக்கிழமை

பெருமானின் திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என அகத்தியர் மனதில் வருத்தம் ஏற்பட்டது. தனது அணுக்க பக்தனின் மனக்குறையை எம்பெருமான் அப்படியே விட்டு விடுவாரா என்ன? நான் உனக்கு திருமணக்காட்சி அருள்கிறேன் என்ற சிவபெருமான், அகத்தியருக்கு திருமணக்காட்சியை காட்டியருளியத் தலம் திருநல்லூர்.

கடவுள் தனக்கு பிரத்யேகமாக திருமணக் கோலத்தைக் காட்டியதைக் கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்தார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை இக்கோவில் மூல லிங்கத்தின் பின்புறம் கண்டு அருள் பெறலாம்.

கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை வணங்கி, கர்ணனை மகனாக ஈன்றார். ஆனால், சிறு பெண்ணான தான் விளையாட்டாக உச்சரித்த மந்திரத்தால் குழந்தை பிறந்ததை எண்ணி அரண்டு போனார் குந்திதேவி. பழிச் சொல்லுக்கு அஞ்சி அந்தக்குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். 

Also Read | ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உற்சாகத்தைக் கொடுக்கும்.!

ஊருக்கு தெரியாவிட்டாலும், அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய விரும்பினாள். 
முனிவர் ஒருவரின் வாக்குப்படி, மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் பாவம் நீங்கும் என்பதை அறிந்தாள். 

பாவ பரிகாரம் செய்யலாம் என்று தனது வேண்டுதலுக்கு விடை கிடைத்தாலும், எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று திகைத்துப் போய் இறைவனிடம் தஞ்சமடைந்தார் குந்தி தேவி.

அப்போது திருநல்லூர் கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடு என்று அசரீரி ஒலித்ததாகவும், குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. குந்தி தேவி நீராடிய தீர்த்தம் - சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

குந்தி தேவியின் பாவத்தை போக்கி முக்தியளித்த திருநல்லூர் தலம் வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய தலம் ஆகும்.

Also Read | அபிஷேகத்திற்கும், மகா அபிஷேகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News