ராசிபலன்: உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும், விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்!

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்..!

Last Updated : Mar 1, 2021, 06:04 AM IST
ராசிபலன்: உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும், விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்! title=

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்..!

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளும் மெச்சும் படி நடந்து கொள்வீர்கள். காரியம் சாதிக்கும் நாள்.

ரிஷபம்:  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில்  முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

கடகம்: கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

சிம்மம்:  உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். பயணங்கள் சிறப்பாக அமையும்.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள் இரண்டாவது முயற்சியில் சில காரியங்களை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்: கணவன்- மனைவிக்குள் வீண் விவாதம் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சி  செலவுகள் இருக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும், விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். இனிமையான நாள்.

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புது திட்டங்கள் நிறைவேறும் நாள்.

மகரம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில்  புதிய சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

கும்பம்:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். விருந்தினர்களின் வருகை உண்டு. பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

Trending News