தீபாவளி: காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு புது முயற்சி!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, டெல்லி அரசு கொனாட் பிளேஸில் ஒரு பெரிய தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது. 

Last Updated : Oct 21, 2019, 05:40 PM IST
தீபாவளி: காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு புது முயற்சி! title=

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, டெல்லி அரசு கொனாட் பிளேஸில் ஒரு பெரிய தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது. 

குறித்த இந்த விழா அக்டோபர் 26 முதல் 29 வரை கொனாட் பிளேஸில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் லேசர் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தீபாவளியன்று கொனாட் பிளேஸில் டெல்லி அரசு தீபாவளியை பிரமாண்டமாக கொண்டாடப் போகிறது, இதற்காக உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் அக்டோபர் 26 முதல் 29 வரை இரவு 6 முதல் 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாசு இல்லாத தீபாவளி திருவிழா கொண்டாட்டத்திற்கு டெல்லி மக்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

இந்த தீபாவளி நிகழ்வை அக்டோபர் 26-ஆம் தேதி மாண்புமிகு லெப்டினன்ட் கவர்னர் திறந்து வைப்பார் என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தை செய்வதில் டெல்லி அரசின் நோக்கம் டெல்லியில் மாசு இல்லாத தீபாவளியை உருவாக்குவதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அதே வேளையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 'டெல்லி மக்கள் இந்த முறை சமூக தீபாவளியை கொண்டாட வேண்டும். மாசு ஏற்படுவதால் பட்டாசுகளை எரிக்க வேண்டாம்.' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி அரசு முதன்முறையாக ஒரு சமூக தீபாவளியை ஏற்பாடு செய்து வருகிறது. பட்டாசுகளிடமிருந்து நீங்கள் பெறும் வேடிக்கை, தீபாவளியைக் கொண்டாட கிடைக்கும் மகிழ்ச்சி, இந்த சமூக தீபாவளியில் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

வழக்கமாக தீபாவளி நாட்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும், இந்நிலையில் தற்போது பட்டாசுகள் இன்றி தீபாவளியை கொண்டாடுவது மாசுகள் இன்றி தூய்மை காக்கும் முயற்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.

Trending News