Kamala Harris என்னம்மா இப்படி பண்றீங்களே, மன்னிப்பு கேளுங்க @Durga pooja

கமலா ஹாரிஸை இந்துக் கடவுள் துர்காவாகவும், டொனால்ட் டிரம்ப்பை அசுரனாகவும் காட்டும் புகைப்படத்தை ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் (America President Election) வேட்பாளர் கமலா ஹாரிஸின் (Kamala Harris) மருமகள் மீனா ஹாரிஸ் (Meena Harris) பகிர்ந்துள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2020, 11:12 PM IST
Kamala Harris என்னம்மா இப்படி பண்றீங்களே, மன்னிப்பு கேளுங்க @Durga pooja title=

புதுடெல்லி: இன்னும் சில நாட்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்குகிறார். அமெரிக்க வாழ் இந்தியர்களின் மனதில் குடியேற விரும்புகிறார் கமலா ஹாரிஸ்.  ஆனால் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி தொடங்கிய பின் வெளியாகிய அவரது ஒரு புகைப்படம் அனைத்து இந்துக்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஆனால் ஆக்கப்பூர்வமாக அல்ல, எதிர்மறையாக மன்னிப்பு கோரச் சொல்லி அவருக்கு இக்கட்டை உருவாக்கும் சங்கடம் ஏற்பட்டது.  

கமலா ஹாரிஸின் மருமகள் ட்வீட் செய்த புகைப்படம்…
கமலா ஹாரிஸின் நெருங்கிய உறவினரான மீனா ஹாரிஸ் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், அதில் கமலா ஹாரிஸ் அன்னை துர்காவாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த புகைப்படம் அமெரிக்காவில் வசிக்கும் இந்து சமூகத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  அதுமட்டுமல்ல, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கொந்தளிக்கின்றனர். சர்ச்சைக்குப் பிறகு, மீனா தனது ட்வீட்டர் செய்தியை நீக்கியுள்ளார். 

புகைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை என்ன?  
மஹிஷாசுரனைக் கொன்ற துர்கையை சித்தரிக்கும் புகைப்படத்தில் அன்னை துர்கைக்குப் பதிலாக கமலா ஹாரிசும், துணை அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் சிங்க வாகனமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். டொனால்ட் டிரம்ப் மகிஷாசுரனாக காட்டப்பட்டுள்ளார்.

இந்து சமூகத்தில் மனக்கசப்பு
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இந்த புகைப்படத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்துக்களின் மனதில் இடம் பெற விரும்பிய கமலா ஹாரிஸ், தற்போது அவர்களின் ஆட்சேபத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு வந்துவிட்டார். அதுமட்டமல்ல, மத நம்பிக்கைகளை கேலிகூத்தாக்கிவிட்டார் என்றும், இந்து தெய்வங்களை கேவலப்படுத்தி விட்டார் என்றும் இந்து சமூகத்தினரிடையே மிகுந்த மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்படி தவறான புகைப்படத்தை பகிர்ந்த கமலா ஹாரிசின் நெருங்கிய உறவினரான மீனா ஹாரிஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இந்திய சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News