224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ளதால், அனல் பறக்கும் பிரசாரத்தால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 15-ம் தேதி நடைபெறும். இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடும் பிரச்சார போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், ஒருவேளை பாஜக-வுக்கு வாக்களித்து வெற்றி பெற்றால், என்ன நடக்கும்? உங்கள் உரிமைகள் எப்படி பறிக்கப்படும் எனக் கூறி ஒரு வீடியோவை காங்கிரஸ் சார்பில், அதன் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு உள்ளது. மேலும் அதில், வாக்கு என்பது உங்கள் ஜனநாயக உரிமை. அது மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும். சிந்தித்து பொறுப்புடனும் வாக்களிக்கவும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
வீடியோ:-
Here's what the BJP would do to the people of Karnataka if it had its way. The vote is a powerful instrument for protection of your civil rights. Vote wisely & responsibly. #VoteCongress
Credits: FB/YoungINDYI pic.twitter.com/mjwXebM2SR— Congress (@INCIndia) May 2, 2018
முன்னதாக, நேற்று கர்நாடகவுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக-வின் முதல்வர் வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது:-
> ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி,
> வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்
> பெண்கள் திருமணத்திற்கு தாலி செய்ய 3 கிராம் தங்கம்
> பெண்கள் திருமணத்திற்கு உதவித் தொகையாக ரூ.25,000 வழங்கப்படும்.
> வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சானட்டரி நாப்கின்கள் ரூ. 1 வழங்கப்படும்
> ரூ.1.5 லட்சம் கோடிக்கு நீர்ப்பாசனத் திட்டம்
> குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்க அன்னபூர்ணா கேண்டீன்கள் திறக்கப்படும்
> 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கர்நாடகவில் அமைக்கப்படும்
> பாரம்பரிய தொழில்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதம்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும், அதற்காக ரூ. 1000 கோடி ஒதுக்கப்படும்.
> பசுவதைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.