மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட CII முடிவு!

தொழில் முன்னேற்றத்திற்காக மாநில அரசுகளுடன் CII இணைந்து செயல்படும் என CII அமைப்பின் தென் மண்டலத் தலைவர் R தினேஷ் தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 8, 2018, 08:28 PM IST
மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட CII முடிவு! title=

தொழில் முன்னேற்றத்திற்காக மாநில அரசுகளுடன் CII இணைந்து செயல்படும் என CII அமைப்பின் தென் மண்டலத் தலைவர் R தினேஷ் தெரிவித்துள்ளார்!

தென்னிந்தியாவில் வலுவான தொழில் சூழலை உருவாக்குவதற்கான குறிக்கோள் மற்றும் அக்கறை உள்ள மாநில அரசுகளுடனும் CII நெருக்கமாக பணியாற்றி அம்மாநில வளர்ச்சிக்கு CII அமைப்பு பெரிதும் துணையாக இருக்கும் என தென் மண்டலத் தலைவர் R தினேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தென் மாநிலங்களில் சிறு மற்றம் குறு தொழில் துறையின் வளர்ச்சியில் CII அக்கறை கொண்டுள்ளது. எனவே தென்னிந்திய அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள், பெண்களுக்கான சம வாய்ப்பு, நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நலத்திட்டங்கள் பலவற்றை இயக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News