வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து ஆன்லைன் பண மோசடி!

வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து பல்வேறு மோசடி நடந்து வருகிறது.  தற்போது சென்னையில் அமேசானில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2021, 12:48 PM IST
வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து ஆன்லைன் பண மோசடி!  title=

திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மேலும் தனக்கு தெரிந்த சில வேலைகளை பார்த்து வந்தார் சீனிவாசன் என்ற இளைஞர்.  சென்னை வடபழனியைச் சேர்ந்த சீனிவாசன் பகுதி நேரமாக திருமண நிகழ்ச்சிகளை யூ ட்யூப் மூலம் நேரடி ஒளிப்பரப்பும் வேலை செய்து வருகிறார்.   கிடைக்கும் வேலையெல்லாம் செய்து வந்த சீனிவாசனுக்கு அமேசான் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.   அதில் நாளொன்றுக்கு 8000 வரை சம்பாதிக்கலாம் என குறிப்பிட்டு இருந்தது. அந்த குறுஞ்செய்தியில் தொடர்புக்கு ஒரு எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.

Scam

இதை நம்பிய சீனிவாசன் அந்த எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள, அமேசான் நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான நடைமுறைகளை பின்தொடர கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்றால் வீட்டில் இருந்தபடியே தினமும் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து அந்த இணைய தளத்திற்குள் சென்று  அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் மீது முதலீடு செய்தால் சிறிது நேரத்தில் முதலீடு செய்த தொகையை விட அதிக தொகை உங்கள் வங்கிக் கணக்குக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

அதனை நம்பி ஸ்ரீனிவாசன் முதலில் ஒரு பொருளின் மீது 500 ரூபாய் முதலீடு செய்ய சிறிது நேரத்தில் 850 ரூபாய் அவரது வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. பின்னர், மீண்டும் பரிசோதிக்க ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய சிறிது நேரத்தில் 1500 ரூபாய் வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. உடனே மகிழ்ச்சி அடைந்த சீனிவாசன் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் 4,000 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதற்கு 9 ஆயிரம் கிடைக்கும் என குறிப்பிட்டு இருந்ததால் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால், சொன்னபடி 9 ஆயிரம் திருப்பி கிடைக்கவில்லை, அவருக்கு வந்த தகவலின் படி மேலும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்தால் ஒட்டுமொத்தமாக முதலீடும், லாபமும் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. அதனை நம்பி பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்ய அதற்கும் இவருக்கு தொகை திருப்பி கிடைக்கவில்லை.  தொடர்ந்து இதுபோன்று 8 பொருட்களின் மீது முதலீடு செய்ய வேண்டும் எனவும் எட்டு டாஸ்குகளையும் முடித்த பிறகே நீங்கள் செலுத்திய ஒட்டு மொத்த தொகைக்கும் லாபத்தோடு சேர்த்து பணம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் கட்டிய பணத்தை அப்படியே விட்டுவிடவும் மனமில்லாமல், எப்படியும் கிடைத்துவிடும் என தன் கையில் இருந்த பணம் நண்பரிடமிருந்து வாங்கிய பணம் என எட்டு முறை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார் சீனிவாசன். ஆனால் லாபத்தை மட்டும் அல்ல இவர் செலுத்திய முதலீட்டு தொகையில் ஒரு ரூபாய் கூட திருப்பி கிடைக்கவில்லை அதற்குப் பிறகு தனது நண்பர்களிடம் விவரத்தை சொன்னபோதுதான் இது ஒரு மோசடி குறுஞ்செய்தி எனவும்,  அமேசான் நிறுவனத்தின் பெயரில் இந்த மோசடி நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பணத்தை இழந்தவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் புகார் என்பதால் தியாகராய நகர் காவல் மாவட்ட சைபர் பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையிடம் கேட்டபொழுது படித்து முடித்துவிட்டு பல்வேறு இணையதளங்கள் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகளை குறிவைத்து அமேசான் போன்ற பிரபல நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி இது போன்ற மோசடி நடப்பதாக தெரிவித்துள்ளனர். வேலை தேடும் இளைஞர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த கூறும் எந்த நிறுவனங்களையும் நம்பி ஏமாற வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News