நான்கு ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ திட்டம்

மெட்ரோ ரயில்  நிலையங்களில் இடைப்பட்ட தூரம் குறைவு காரணமாக 2ஆவது கட்டத்தில் உள்ள நான்கு ரெயில் நிலையங்களை அமைக்கும் பணியை தற்போதைக்கு கைவிடுவதாக மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Last Updated : Sep 10, 2021, 11:45 AM IST
நான்கு ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ திட்டம் title=

சென்னை : மெட்ரோ ரயில்  நிலையங்களில் இடைப்பட்ட தூரம் குறைவு காரணமாக 2ஆவது கட்டத்தில் உள்ள நான்கு ரெயில் நிலையங்களை அமைக்கும் பணியை தற்போதைக்கு கைவிடுவதாக மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.இந்த முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

பயணிகள் நடந்து சென்றாவது எளிதாக மெட்ரோ ரயில் நிலையங்களை அடைய வேண்டும்.அத்துடன் அவசர காலங்களில் பயணிகளை வெளியேற்றுவதற்கு வசதியாகவும் மாநகரில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் ஒரு கிலோ மீட்டர் (1000) மீட்டர் இடைவெளியில் அமைக்கப்படட்டுள்ளது.சென்னையில் ரூ. 61ஆயிரத்து 843கோடி மதிப்பீட்டில் 128கிலோ மீட்டருக்கு 2ஆவது திட்டம் வடிவமைக்கப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகளானது நடைபெற்று வருகிறது.

ALSO READ : Breaking News: தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

இந்த 2ஆவது திட்டத்திலும் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரம் முதல் வழித்தடத்தில் அமைக்கப்பட்டு இருப்பது போன்று 1கிலோ மீட்டர் இடைவெளியில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வகையில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு இருந்தது.இதில் 4ரெயில் நிலையங்கள் சுமார் 1கிலோ மீட்டருக்கும் குறைவான இடைவெளியை கொண்டு இருப்பதால் அந்த 4ரெயில் நிலையங்கள் அமைக்கும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு இருந்தது.இதில் 4 ரெயில் நிலையங்கள் 1கிலோ மீட்டருக்கும் குறைவாக இடைவெளியைக் கொண்டு இருப்பதால் அந்த 4ரெயில் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை தற்போது கைவிட்டு அதற்கு செலவிடுவதற்கான தொகையை மற்ற மாற்றுப் பணிகளுக்கு செலவிட சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில்: 

"சென்னையில் 2ஆவது கட்டமாக மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கான திட்ட செலவு ரூ.89 ஆயிரம் கோடி முதலில் மதிப்பிடப்பட்டு இருந்தது.ஆனால் திட்டத்தின் செலவை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ரூ.61ஆயிரத்து 143 கோடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இதனால் கட்டுமானத்திற்கு செலவழிக்கப் படும் நேரம் மற்றும் பணமும் மிச்சப்படுத்தப்படும். 128 கிலோ மீட்டர் தூரத்தில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் 4வது வழிப்பாதையில் தியாகராயநகர் , வெங்கட்நாரயணா சாலையில் உள்ள நடேசன் பூங்கா ரெயில் நிலையம் , 3வது வழிப்பாதையில் கலங்கரை விளக்கம் அருகில் உள்ள கடற்கரை சாலை ரெயில் நிலையம் , டவுட்டண் சந்திப்பு ரெயில் நிலையம் , பழைய மாமல்லபுரம் சாலை , செம்மஞ்சேரி அருகில் உள்ள செயின் ஜோசப் கல்லூரி ரெயில் நிலையங்களுக்கு அருகில் ரெயில் நிலையங்கள் உள்ளன.

பனகல் பூங்கா , நடேசன் பூங்கா ரெயில் நிலையங்களுக்கு இடையிலான தூரம் 632 மீட்டராகும். நடேசன் பூங்காவில் இருந்து நந்தனம் ரெயில் நிலையம் வருகிறது.

அதே போல் சத்தியபாமா பல்கலைக்கழக ரெயில் நிலையமும் , செயின்ட் ஜோசப் கல்லூரி ரெயில் நிலையத்தில் இருந்து அடுத்து 905 மீட்டரில் செம்மஞ்சேரி ரெயில் நிலையம் வருகிறது.

அதே போல மெரினா கடற்கரை , கலங்கரை விளக்கம் ரெயில் நிலையத்திற்கும் , கடற்கரை சாலை ரெயில் நிலையத்திற்கும் இடையிலான தூரம் 786 மீட்டர் ஆகும். கடற்கரை சாலை ரெயில் நிலையத்தில் இருந்து 958 மீட்டர் தூரத்தில் கச்சேரி சாலை ரெயில் நிலையம் வருகிறது. அதே போல் டவுட்டண் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கும் , பெரம்பூர் பேராக்ஸ் சாலை ரெயில் நிலையத்திற்கும் இடையிலான தூரம் 829 மீட்டராகும். டவுட்டண் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 614 மீட்டரில் புரசைவாக்கம் நெடுஞ்சாலை ரெயில் நிலையம் அமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ : Lockdown extended:தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News