செபி உத்தரவு குறித்து ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவரின் அதிகாரப்பூர்வ அறிக்கை
“ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) இன் இயக்குநர்கள் குழு, டாக்டர். சுபாஷ் சந்திரா மற்றும் திரு. புனித் கோயங்கா ஆகியோரைப் பொறுத்து, செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) வழங்கிய இடைக்கால எக்ஸ்-பார்ட் உத்தரவை கவனத்தில் கொண்டுள்ளது. வாரியம் தற்போது விரிவான உத்தரவை மறுபரிசீலனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தகுந்த சட்ட ஆலோசனை பெறப்படுகிறது.
வருடா வருடம் பங்குதாரர் மதிப்பை அதிகரிப்பதில் ஒரு தனி கவனம் செலுத்தி, நிறுவனத்தின் வாரியமானது அதன் மூலோபாய இலக்குகள் மற்றும் எதிர்காலத்திற்கான முன்னுரிமைகளை நோக்கி நிர்வாகத்தை தொடர்ந்து வழிநடத்தி வருகிறது.
நிறுவனம் மற்றும் அதன் அனைத்து மதிப்புமிக்க பங்குதாரர்களின் நலன்கள் முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதற்காக, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நிறுவனத்தின் நிறுவனராக டாக்டர். சுபாஷ் சந்திராவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும், திரு. புனித் கோயங்கா வெளிப்படுத்திய வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கத்தை மையமாகக் கொண்ட தலைமைத்துவத்தையும் வாரியம் அங்கீகரிக்கிறது. நிறுவனம், எதிர்காலத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தொடர்ந்து அடையும் என்றும், அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை உருவாக்கும் என்றும் வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது." – திரு. ஆர். கோபாலன், தலைவர், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ