Whatsapp-பிலேயே fixed deposit ஓப்பன் செய்யும் வசதியை அளிக்கிறது இந்த வங்கி

Whatsapp-ல் வாடிக்கையாளர்களுக்கு 25 வகையான வசதிகள் வழங்கப்படுவதாக ICICI வங்கி தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2020, 10:50 AM IST
  • Whatsapp-ல் வாடிக்கையாளர்களுக்கு 25 வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன-ICICI வங்கி.
  • ICICI வங்கியின் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலம் fixed deposit கணக்குகளை சில நிமிடங்களில் திறக்கலாம்.
  • மின்சார பில், வாட்டர் பில், மொபைல் பில் மற்றும் கேஸ் பில் ஆகியவற்றை செலுத்த Whatsapp ஒன்றே போது.
Whatsapp-பிலேயே fixed deposit ஓப்பன் செய்யும் வசதியை அளிக்கிறது இந்த வங்கி title=

புதுடெல்லி: தனியார் துறை வங்கியான ICICI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக WhatsApp-ல் பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார பில், வாட்டர் பில், மொபைல் பில் மற்றும் கேஸ் பில் ஆகியவற்றை செலுத்த, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு செயலிகளிக்கு செல்ல தேவையில்லை. நீங்கள் இந்த பணிகளை whatsapp-பிலும் செய்யலாம்.

Whatsapp-பிலேயே பல பணிகளை முடிக்கலாம்

பயன்பாட்டு பில் கட்டணம் தவிர, ICICI வங்கியின் வாடிக்கையாளர்கள் whatsapp மூலம் நிலையான வைப்பு (Fixed Deposit) மற்றும் வர்த்தக நிதி தொடர்பான பணிகளையும் செய்யலாம். இந்த அனைத்து பணிகளுக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வரத் தேவையில்லை. ICICI வங்கியின் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலம் fixed deposit கணக்குகளை சில நிமிடங்களில் திறக்கலாம்.

இது தவிர, கார்ப்பரேட் மற்றும் MSME துறையுடன் தொடர்புடைய நபர்கள் வாட்ஸ்அப்பிலேயே வர்த்தக நிதி பற்றிய தகவல்களையும் பெறலாம்.

வாடிக்கையாளர் ஐடி, ஏற்றுமதி-இறக்குமதி குறியீடு மற்றும் வங்கியில் இருந்து பெறப்பட்ட அனைத்து கடன் வசதிகள் பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

Whatsapp Banking-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது

 1. முதலில், ICICI வங்கியின் 86400 86400 என்ற எண்ணை உங்கள் தொலைபேசியில் சேவ் செய்து கொள்ளவும்

2. வங்கியுடன் தொடர்புடைய இந்த பணிகளை உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே செய்யுங்கள்

3. Whatsapp-ஐத் திறந்து இந்த எண்ணுக்கு ‘Hi’ அனுப்பவும்

4. பின்னர் ஆக்டிவேட் செய்யப்பட்ட உங்களது வசதிகளின் பட்டியலையும் வங்கி உங்களுக்கு அனுப்பும்

5. Whatsapp-பில் நீங்கள் விரும்பும் அம்சத்தை தேர்ந்தெடுக்கவும்

6. Whatsapp-பிலேயே, அனைத்து சேவைகள் மற்றும் தொடர்புடைய தகவல்களின் விவரங்களைப் பெறுவீர்கள்.

ALSO READ: தொழிலில் அதிக லாபம் காண அரசின் இந்தத் திட்டம் உங்களுக்கு உதவும்!!

Whatsapp-ல் FD திறப்பது எப்படி

உங்கள் Fixed Deposit கணக்கை whatsapp-பில் திறக்க விரும்பினால், நீங்கள் FD, Fixed Deposit போன்ற Key Word-களை டைப் செய்து அனுப்ப வேண்டும். பின்னர் ஃபிக்ஸ்ட் டெபாசிட் செய்ய வேண்டிய தொகையின் அளவை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும். தொகை ரூ .10,000 முதல் ரூ .1 கோடி வரை இருக்கலாம்.

இதற்குப் பிறகு, நீங்கள் கால அளவையும் கூற வேண்டும். நீங்கள் கால அளவை எழுதியவுடன், அதற்கேற்ப வட்டி விகிதங்களின் பட்டியலைப் பெறுவீர்கள். மேலும் முதிர்ச்சியடைந்தவுடன் நீங்கள் எவ்வளவு தொகையைப் பெறுவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரிய வரும்.

Whatspp-ல் 25 அம்சங்கள் கிடைக்கின்றன

Whatsapp-ல் வாடிக்கையாளர்களுக்கு 25 வகையான வசதிகள் வழங்கப்படுவதாக ICICI வங்கி (ICICI Bank) தெரிவித்துள்ளது. வங்கி ஆறு மாதங்களுக்கு முன்பு whatsapp-பில் வங்கி சேவைகளைத் தொடங்கியது.

இந்த பட்டியலில் சேமிப்புக் கணக்கின் நிலுவைத் தொகையைச் சரிபார்ப்பது, கிரெடிட் கார்டு தகவல்களை எடுத்துக்கொள்வது, கிரெடிட்-டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக பிளாக் செய்வது, அன்லாக் செய்வது, வீட்டிலிருந்தபடியே சேமிப்புக் கணக்கைத் திறப்பது மற்றும் கடன் தடை தொடர்பான பல அம்சங்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் கிடைக்கும்.

ALSO READ: Good news: மானியம் இல்லாத LPG சிலிண்டரிலும் இந்த வழியில் தள்ளுபடி பெறலாம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News