Property Tax: சொத்து வாங்கும்போது பணப் பரிமாற்றத்தின் வரம்பு என்ன? மீறினால் வருமான வரி நோட்டீஸ், அபராதம்

Income Tax on Purchase of Property in India: சொத்து வாங்கும்போது பணத்திற்கான ஏற்பாட்டை செய்வது எத்தனை முக்கியமோ அதே அளவு, சொத்து வாங்கி விற்பது குறித்த விதிகளை பற்றி தெரிந்து வைத்திருப்பதும் முக்கியம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 9, 2024, 11:23 AM IST
  • சொத்து பரிவர்த்தனையின் அளவு என்னவாக இருந்தாலும், ஒருவர் ரொக்கமாக ரூ.19,999க்கு மேல் வாங்க முடியாது.
  • இதற்காக, 2015 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 269SS, 269T, 271D மற்றும் 271E ஆகிய பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
  • இதில், 269SS இல் செய்யப்பட்ட மாற்றம் மிகவும் முக்கியமானது.
Property Tax: சொத்து வாங்கும்போது பணப் பரிமாற்றத்தின் வரம்பு என்ன? மீறினால் வருமான வரி நோட்டீஸ், அபராதம் title=

Income Tax Rules For Property Purchase in India: இந்தியாவில் சொத்தில் பணம் செலுத்துவதற்கான வரம்பு: நம்மில் பெரும்பாலானோர் வீடு, கடை, நிலம் என பல வித சொத்துகளை வாங்குகிறோம், விற்கிறோம். சொத்து வாங்கும்போது பணத்திற்கான ஏற்பாட்டை செய்வது எத்தனை முக்கியமோ அதே அளவு, சொத்து வாங்கி விற்பது குறித்த விதிகளை பற்றி தெரிந்து வைத்திருப்பதும் முக்கியம். நீங்கள் சொத்தை வாங்க அல்லது விற்க விரும்பினால், பரிவர்த்தனை தொடர்பான முழுமையான விதிகளை அறிந்து கொள்வது நல்லது. சொத்து வாங்குவதும் விற்பதும் பெரிய முதலீடு. இதில் சிலர் கையில் இருக்கும் பணத்தை கொண்டே சொத்து வாங்குவது உண்டு, சிலர் வங்கிகளில் கடன் பெறுகிறார்கள். 

நாம் சொத்தை (Property) வாங்கும் அல்லது விற்கும் நபருக்கான சில விருப்பங்களும் இருக்கும். சில நேரங்களில் அவர்களும் ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய முன்வருகிறார்கள். எனினும் சொத்தின் முழு விலையையும் பணமாக செலுத்த முடியாது. இதற்கும் முறையான விதிகள் உள்ளன. ரொக்கப் பரிவர்த்தனைகளில் இந்த வரம்புகளை நீங்கள் மீறினால், உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் (Income Tax Notice) வர வாய்ப்புள்ளது. 

சொத்து பரிவர்த்தனையின் அளவு என்னவாக இருந்தாலும், ஒருவர் ரொக்கமாக ரூ.19,999க்கு மேல் வாங்க முடியாது. இதற்காக, 2015 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) 269SS, 269T, 271D மற்றும் 271E ஆகிய பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில், 269SS இல் செய்யப்பட்ட மாற்றம் மிகவும் முக்கியமானது. இது அத்தகைய சூழ்நிலைகளில் விதிக்கப்படும் அபராதம் பற்றி கூறுகிறது. கறுப்புப் பணத்தைத் தடுக்கும் நோக்கத்தில் அரசு இதைச் செய்தது. ஒரு பணப் பரிவர்த்தனை (Cash Transactions) நடந்த பிறகு, பணம் சட்டப்பூர்வமாக சம்பாதிக்கப்பட்டதா அல்லது சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதா என்பதைக் கண்டறிவது கடினமாகி விடுகிறது. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய உயர்வு: ஏற்றம் காணும் 2 அலவன்சுகள்

269எஸ்எஸ் பிரிவின் கீழ், ஒருவர் நிலம் (விவசாயம் செய்ய எடுத்தாலும்), வீடு அல்லது பிற அசையாச் சொத்துக்களை விற்பதற்காக ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக வாங்கினால், அவருக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்திலிருந்து இதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

100 சதவீதம் அபராதம் என்றால் என்ன?

வருமான வரிச் சட்டத்தின் 269எஸ்எஸ் பிரிவின் கீழ், ஒருவர் சொத்தை விற்கும்போது ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக (Cash) பெற்றுக் கொண்டால், அந்தத் தொகை முழுவதையும் இழப்பீடாகச் செலுத்த வேண்டும். அதாவது, நீங்கள் ரூ.50,000 அல்லது ரூ.1 லட்சம் வாங்கியிருந்தாலும், முழுத் தொகையும் வருமான வரித் துறைக்கு (Income Tax Department) அபராதமாகச் செல்லும்.

வருமான வரியின் (Income Tax) மற்றொரு பிரிவு 269T இதை இன்னும் கடுமையாக்குகிறது. சில காரணங்களால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, சொத்து வியாபாரி அல்லது விற்பனையாளரிடம் இருந்து சொத்தை வாங்க இருந்தவர், பணத்தை ரொக்கமாக திரும்பக் கேட்டால், மீண்டும் அபராதம் விதிக்கப்படும். 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக திருப்பி அனுப்பினால், 269SS போலவே, முழுத் தொகையும் அபராதமாகச் (Penalty) செல்லும். இருப்பினும், இந்த சட்டம் அரசு, அரசு நிறுவனம், வங்கி நிறுவனம் அல்லது மத்திய அரசால் (Central Government) அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தாது.

மேலும் படிக்க | Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் வருமானம் கொடுக்கும் அசத்தல் திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News