RBI Update: கடன் தள்ளுபடி விளம்பரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடன் தள்ளுபடி சேவைகளை வழங்கும் அறிவிப்புகளை வெளியிடும் விளம்பரங்களுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அத்தகைய விளம்பரதாரர்கள் கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்குவதற்கு சேவை அல்லது சட்டப்பூர்வ கட்டணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அப்படி செய்வதற்கான அதிகாரம் இல்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள், அச்சு ஊடகங்களுடன் (Print Media) சமூக ஊடக தளங்களிலும் (Social Media) இதுபோன்ற விளம்பரங்களை தீவிரமாக வழங்குகிறார்கள் என்று ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) தெரிவித்துள்ளது. இதுபோன்ற தவறான பிரச்சாரங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களை பற்றி சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.
RBI Cautions against unauthorised campaigns on Loan waiverhttps://t.co/OJIq2TCm2A
— ReserveBankOfIndia (@RBI) December 11, 2023
வங்கியின் முயற்சிகள் பலவீனமடைகின்றன
சமீப காலங்களில் இப்படிப்பட்ட பணிகளில் பலர் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இது பத்திரங்களை மீட்டெடுப்பதற்கான வங்கிகளின் உரிமைகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை பலவீனப்படுத்துகிறது என்று மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்று இந்த நபர்கள் ஒரு தவறான கருத்தையும் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க | SIP Calculator: வெறும் ரூ.150 சேமித்து ரூ.22,70,592 பம்பர் லாபம் பெறுவது எப்படி?
இவற்றில் ஈடுபட்டால் நிதி இழப்பு ஏற்படலாம்.
இது போன்ற செயல்கள் நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மைக்கும், டெபாசிட் செய்பவர்களின் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பணிகளைச் செய்யும் நிறுவனங்களுடன் தொடர்புகொள்வது நேரடியான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கத்தக்கது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்
வழிமுறைகளை மீறி, சட்டங்களை மதிக்காமல், விதிகளை மீறிய செயல்களில் ஈடுபடும் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து தண்டனை அளிக்கின்றது. சமீபத்திலும் பல வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் சிக்கியதை கண்டோம். ஆனால், ரிசர்வ் வங்கியின் பாராட்டுகளை பெற்ற வங்கிகளும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்!! நாட்டில் உள்ள மூன்று வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ஒரு வங்கி தன் செயல்பாடுகளில் தோல்வியடைந்தால், ரிசர்வ் வங்கி சரியான நேரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. இது போன்ற நடவடிக்கைகள் யெஸ் வங்கியின் அதிகரித்த NPA விஷயத்திலும், பிற அரசு வங்கிகளின் விஷயத்திலும் எடுக்கப்பட்டன. இப்போது ரிசர்வ் வங்கி, எப்போதும் தோல்வியடைவதாற்கான வாய்ப்பே இல்லாத நாட்டின் 3 வங்கிகளின் (Safest Bank in India) பட்டியலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), உள்நாட்டு அமைப்பில் ஒரு முக்கியமான வங்கி (D-SIB) என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. இரண்டு தனியார் துறை வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் எச்டிஎஃப்சி வங்கியும் (HDFC Bank) இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மிகப்பெரிய நிலையில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள, தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லாத பெரிய வங்கிகள் D-SIB -கள் என்று அழைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | RBI புதிய வங்கி லாக்கர் விதிகள்: வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம், வங்கிகளுக்கு கெடுபிடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ