Post Office MIS: மனிதர்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணத்திற்கான அவசியம் ஏற்படுகின்றது. பண தேவை என்பது வயது வரம்பிற்கு அப்பாற்பட்டது. அனைவருக்குமே தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி கொள்ள பணம் தேவை. இளைஞர்களுக்கு ஒரு விதமான பணத்தேவை இருக்கும் என்றால் வயதானவர்களுக்கும் வேறு விதமான பணத்தேவை இருக்கின்றது.
இளம் வயதிலேயே நமது பணி ஓய்வு (Retirement) காலத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சேமிப்பை துவக்க வேண்டும். வயதாகி விட்டால் வருமானமும் குறையும், உடலின் ஆற்றலும் குறையும். ஆகையால் பணி ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க போதுமான அளவு முதலீடு செய்வது அவசியமாகும்.
முதலீட்டு திட்டங்களை (Investment Plans) தேர்ந்தெடுப்பதில் அதிகபட்ச கவனம் தேவை. ஒவ்வொருவரது தேவையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எனினும் சில விஷயங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். சேமிப்பை பொறுத்தவரையில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நமது சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும். அரசாங்க ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டங்களில் இப்படிப்பட்ட திட்டங்கள் உள்ளன.
தபால் நிலைய திட்டங்கள்
தபால் நிலைய திட்டங்கள் (Post Office Schemes) பாதுகாப்பாக இருப்பதோடு இவற்றில் நல்ல வருமானமும் கிடைக்கின்றது. இந்த திட்டங்களுக்கு அரசாங்கத்தின் உத்தரவாதமும் இருக்கின்றது. இத்திட்டங்களில் கிடைக்கும் தொகை பல வங்கிகள் (Banks) கொடுக்கும் பிக்சட் டெபாசிட்களின் (Fixed Deposit) விகிதங்களை விட அதிகமாக உள்ளது. தபால் அலுவலகம் வழங்கும் ஏராளமான திட்டங்களில் மாதாந்திர வருமானத் திட்டம் அதாவது மந்த்லி இங்கம் ஸ்கீமும் (Monthly Income Scheme) ஒன்றாகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மொத்த வைப்பு தொகையில் வருமானம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office MIS: சில முக்கிய அம்சங்கள்
- போஸ்ட் ஆபீஸ் எம்ஐஎஸ் (Post Office MIS) திட்டத்தில் முதலீட்டாளர் ஒன்பது லட்சம் ரூபாய் வரை ஒரே கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
- கூட்டுக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.
- முதலீட்டாளர் விரும்பினால் அசல் தொகை ஐந்து வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு திருப்பி தரப்படும்.
- எனினும் இதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் செய்யலாம்.
- ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு பிறகும் பணத்தை திரும்ப எடுப்பதற்கோ அல்லது திட்டத்தை நீட்டிப்பதற்கோ தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி ஒவ்வொரு மாதமும் தபால் நிலைய சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும்.
- தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் டிடிஎஸ் (TDS) கழிக்கப்படாது.
- எனினும் நமது கையில் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | Business Idea: ‘இந்த’ தொழில் செய்தால்..மாதா மாதம் பல லட்சம் வரை லாபம் பார்க்கலாம்!
ப்ரீ-மெச்சூர் குளோசருக்கான விதிகள் (Post Office MIS: Pre-Mature Closure Rules)
இந்த திட்டத்தின் முதிர்வுக்கு முன்னால் பணத்தை எடுக்க விரும்பினால் ஒரு ஆண்டிற்கு பிறகு இந்த வசதி கிடைக்கும். ஆனால் ஒரு ஆண்டு காலத்திற்கு முன்பாகவே பணத்தை எடுக்க வேண்டுமானால் இந்தத் திட்டத்தில் அதை செய்ய முடியாது. திட்ட கால அளவிற்கு முன்னதாக பணத்தை எடுக்க, அதாவது ப்ரீ-மெச்சூர் கிளோசர் செட்ட விரும்பினால், அதற்கு முதலீட்டாளர்கள் அபராதம் (Penalty) கட்ட வேண்டும். ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால் டெபாசிட் தொகையில் இரண்டு சதவீதம் கழிக்கப்பட்டு பணம் திருப்பி தரப்படும்.
தபால் அலுவலக MIS: முக்கிய விவரங்கள்
முதலீடு: 9 லட்சம்
ஆண்டு வட்டி விகிதம்: 7.4%
திட்ட கால அளவு: 5 ஆண்டுகள்
வட்டி மூலம் ஈட்டப்படும் வருவாய்: ரூ 3,33,000
மாத வருமானம்: ரூ.5,550
மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ