மூத்த குடிமக்களுக்கு பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளில் உள்ள வரி அடுக்குகள் என்ன?

Old Tax Regime slabs vs New Tax Regime slabs: 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் சீனியர்கள் பொது வரி செலுத்துவோரை விட அதிக வரிச் சலுகைகளைப் பெறுகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 29, 2023, 01:18 PM IST
  • பழைய வரி முறையின் கீழ், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு வரிப் பொறுப்பு இல்லை.
  • வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேலாகவும் ரூ.5 லட்சத்துக்கு குறைவாகவும் இருப்பவர்களுக்கு வரிப் பொறுப்பு 5 சதவீதம்.
  • ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.10,000.
மூத்த குடிமக்களுக்கு பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளில் உள்ள வரி அடுக்குகள் என்ன? title=

Old Tax Regime slabs vs New Tax Regime slabs: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அனைத்து இந்திய குடிமக்கள், சம்பளம் வாங்குபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கட்டாயமான ஒரு செயலாகும். வருமான வரித் துறையின் விதிகளின் படி, முந்தைய ஆண்டில், 60 வயது அல்லது அதற்கு மேலும் 80 வயதுக்குக் குறைவாகவும் உள்ளவர்கள் வருமான வரி நோக்கங்களில் மூத்த குடிமக்களாகக் கருதப்படுவார்கள். முந்தைய ஆண்டில் 80 வயதை கடந்தவர்கள் சூப்பர் சீனியர்களாக கருதப்படுகிறார்கள். 

1961 இன் வருமான வரிச் சட்டத்தின் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மூத்த குடிமக்கள் (Senior citizens) மற்றும் சூப்பர் சீனியர்கள் (Super Senior Citizens) பொது வரி செலுத்துவோரை விட அதிக வரிச் சலுகைகளைப் பெறுகின்றனர்.

பழைய வரி முறை (Old Tax Regime) மற்றும் புதிய வரி முறையின் (New Tax Regime) கீழ் மூத்த குடிமக்களுக்கான வரி அடுக்குகளின் (Tax Slabs) பகுப்பாய்வை இங்கே காணலாம். 

பழைய வரி முறை (Old Tax Regime for Senior Citizens) 

இதில் மூத்த குடிமக்களுக்கு அடிப்படை விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாகவும், பொது வரி செலுத்துவோருக்கு ரூ.2.50 லட்சமாகவும் உள்ளது. சூப்பர் மூத்த குடிமக்களுக்கு, கொடுக்கப்பட்ட நிதியாண்டில் இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உள்ளது.

வருமான வரிச் சட்டம் 1961 இன் படி, ஒரு நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட வரிப் பொறுப்பு ரூ. 10,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் மூத்த குடிமக்கள் அட்னான்ஸ் டாக்ஸ் (Advance Tax) செலுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு "வணிகம் அல்லது தொழிலின் லாபம் மற்றும் ஆதாயங்கள்" என்ற தலைப்பின் கீழ் வருமானம் இல்லாததால், எந்த அட்வான்ஸ் டாக்சையும் செலுத்த வேண்டியதில்லை.

பொது வரி செலுத்துவோரைப் போலவே, மூத்த குடிமக்களும் ஓய்வூதிய வருமானத்திற்கு எதிராக ரூ.50,000 வரை நிலையான விலக்கு கோரலாம்.

> பழைய வரி முறையின் கீழ், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு வரிப் பொறுப்பு இல்லை.

> வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேலாகவும் ரூ.5 லட்சத்துக்கு குறைவாகவும் இருப்பவர்களுக்கு வரிப் பொறுப்பு 5 சதவீதம்.

> பழைய வரி முறையின் கீழ், வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ. 5 லட்சம் வரை இருந்தால், நிவாரணம் u/s 87A க்கு வரிப் பொறுப்பு பூஜ்யமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

> ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.

> ரூ.10 லட்சத்துக்கு மேல், வரி விகிதமானது ரூ.1.10 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கும் மேலான தொகையில் 30 சதவீதம்.

> வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 50 லட்சத்திற்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும், இந்த சதவீதம் 10-37 சதவீதத்தில் இருந்து மாறுபடலாம், இது ஓரளவு நிவாரணத்திற்கு உட்பட்டது.

> உடல்நலம் மற்றும் கல்வி செஸ் உள்ளது, இது வருமான வரியில் 4 சதவீதம் மற்றும் கூடுதல் கட்டணமாக இருக்கும்.

மேலும் படிக்க | அதிக வட்டி தரும் திட்டம் SCSS! சூப்பர் திட்டத்தின் அடிப்படையையே புரிஞ்சுக்கலையா?

சூப்பர் சீனியர்களுக்கு

> ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு பூஜ்ஜிய வரி.
> ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தால், ரூ.5 லட்சத்துக்கு மேல் 20 சதவீதம்.
> ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால், வரி விகிதம் ரூ.1 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம். 
> கூடுதல் கட்டணம் மற்றும் உடல்நலம் மற்றும் கல்வி செஸ் மூத்த குடிமக்களுக்கு சமமானது.

புதிய வரி விதிப்பு  (New Tax Regime for Senior Citizens) 

புதிய வரி விதிப்பில் மூத்த மற்றும் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு அதிக வரி அடுக்குகள் உள்ளன. புதிய வரி முறையின் பிரிவு 115BAC இன் படி, மூத்த மற்றும் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு வருமான வரி விகிதங்களும் அடுக்குகளும் ஒரே மாதிரியாக இருக்கும்.

> ரூ.2.5 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை.
> ரூ.2.5-க்கு மேல் ரூ.5 லட்சம் வரை, ரூ.2.5 லட்சத்துக்கு மேல் 5 சதவீதம்.
> ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை, வரித் தொகை ரூ.12,500 மற்றும் ரூ.5 லட்சத்துக்கு மேல் 10 சதவீதம்.
> ரூ. 7.5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரை, ரூ. 37,500 மற்றும் 15 சதவீதம் மேல் ரூ. 7.5 லட்சம்.
> ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.12.5 லட்சம் வரை, ரூ.75,000 மற்றும் ரூ.10 லட்சத்துக்கு மேல் 20 சதவீதம்.
> ரூ.12.5 லட்சத்துக்கு மேல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால், ரூ.1.25 லட்சம் மற்றும் ரூ.12.5 லட்சத்துக்கு மேல் 25 சதவீதம். 
> ரூ.15 லட்சத்திற்கு மேல், ரூ.1,87,500 மற்றும் ரூ.15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்.

புதிய வரி விதிப்பின் கீழ், மூத்த குடிமக்கள் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு (Health Incurance Premium) பிரிவு 80D அதிகபட்சமாக கீழ் 50,000 வரை விலக்கு கோரலாம். ஒரு மூத்த குடிமகனைச் சார்ந்திருக்கும் ஒருவருக்கு ஏற்படும் செலவுகள் என்றால், ஒரு நிதியாண்டில் இந்த தொகை ரூ. 1 லட்சம் ஆகும்

மூத்த மற்றும் சூப்பர் சீனிய குடிமக்களுக்கு சேமிப்பு வங்கிக் கணக்குகளில் இருந்து வரும் வட்டி வருமானத்திற்கு 80TTA பிரிவின் கீழ் அதிகபட்சமாக 50,000 ரூபாய் கழிக்க அனுமதிக்கப்படுகிறது. பொது வரி செலுத்துவோருக்கு இது 10,000 ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க | பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க ஆலோசனை... புத்தாண்டில் வரப்போகும் மகிழ்ச்சி செய்தி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News