EPFO Claim: அலுவலக பணிகளில் வேலை செய்பவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி (EPF) அவர்களின் ஓய்வூதியத்திற்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் (PF Account) ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். பணியாளர் செலுத்தும் அதே தொகையை முதலாளி / நிறுவனமும் செலுத்துகின்றன. இது மறைமுகமாக பணியாளர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பாக அமைகின்றது. இது ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு முக்கிய அங்கமாகும். மிகவும் பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாக இது உள்ளது. இது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அவர்களின் பணத் தேவையின் போது உதவியாக வருகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புகளை கண்காணிக்கும் நோடல் ஏஜென்சி. பொதுவாக ஒரு ஊழியர் ஓய்வுபெறும்போது ஓய்வூதிய நிதியாக பிஎஃப் நிதியை எடுக்கிறார். ஆனால், பிஎஃப் சந்தாதாரர்கள் சில சூழ்நிலைகளில் வருங்கால வைப்பு நிதி கார்பஸில் இருந்து பகுதியளவு தொகையையும் திரும்பப் பெறலாம் (premature withdrawals), அல்லது முன்பணம் அதாவது அட்வான்ஸ் பெறலாம்.
இந்த தொகை சந்தாதாரர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதற்கு 10 நாட்கள் வரை ஆகும். இது தவிர கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஒரு பிஎஃப் சந்தாதாரரின் பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் என்ன? இதை எப்படி தவிர்ப்பது? இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
தகவல் முரண்பாடுகள்
இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) நிராகரிப்புகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம் சமர்ப்பிக்கப்பட்ட க்ளெய்ம் விவரங்கள் மற்றும் இபிஎஃப்ஓ பதிவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளாக இருக்கலாம். பெயர், நிறுவனத்தில் சேர்ந்த மற்றும் வெளியேறிய தேதி, வங்கிக் கணக்கு விவரங்கள், KYC பதிவுகள் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்கள் ஒத்துப்போவதை உறுதி செய்துகொள்வது முக்கியம்.
முழுமையற்ற ஆவணங்கள்
சில சுய-அறிவிப்பு படிவங்கள் (Self Declaration) க்ளெய்ம்களுக்கு முன்நிபந்தனைகளாக உள்ளன. நிராகரிப்புகளைத் தவிர்க்க, சமர்ப்பிக்கும் முன் இந்தப் படிவங்களை முழுமையாக மதிப்பாய்வு செய்வது அவசியம்.
மேலும் படிக்க | இந்திய ரயில்வே விதிகள்... ‘இந்த’ தப்பை செஞ்சுடாதீங்க... கம்பி எண்ண வேண்டி வரும்!
பெயர் பொருந்தாமல் இருப்பது
EPF பதிவுகள் மற்றும் ஆதார் விவரங்களுக்கு இடையே முரண்பாடுகள் இருந்தால், திருத்தத்திற்கான கோரிக்கையுடன் கூட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கிக் கணக்கு விவரங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
EPFO போர்ட்டலில் வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் IFSC குறியீடுகளைப் புதுப்பிக்கத் தவறினால் அது க்ளெய்ம் நிராகரிப்புகளுக்கு வழிவகுக்கும். வங்கி விவரங்களின் துல்லியத்தை சரிபார்த்து உறுதிப்படுத்துவது வெற்றிகரமான தீர்வுகளுக்கு முக்கியமானது.
உறுப்பினர் தகவல் துல்லியமாக இருக்க வேண்டும்
நிராகரிப்புகளைத் தடுக்க, நிறுவனப் பதிவுகளுடன் ஒப்பிடும்போது உறுப்பினர் விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்வது அவசியம்.
கையொப்பத்தின் தெளிவு மற்றும் ஆவணத்தின் தரம்
ஆன்லைன் க்ளெய்ம்களின் போது சமர்ப்பிக்கப்பட்ட தெளிவான உறுப்பினர் கையொப்பங்கள் மற்றும் தெளிவான காசோலை நகல்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. தெளிவற்ற கையொப்பங்கள் அல்லது காசோலை நகல்கள் க்ளெய்ம் நிராகரிப்புகளுக்கு வழிவகுக்கும்.
முழுமையற்ற KYC
முழுமையடையாத அல்லது சரிபார்க்கப்படாத KYC விவரங்கள் க்ளெய்ம் நிராகரிப்புகளுக்கு அடிக்கடி காரணமாகின்றன. KYC தகவலின் முழுமையான நிறைவு மற்றும் சரிபார்ப்பு அவசியம்.
ஆதார் மற்றும் UAN இணைப்பு
யுனிவர்சல் அக்கவுன்ட் எண்ணுடன் (யுஏஎன்) ஆதாரை சரிபார்த்து இணைப்பது முக்கியமானது. UAN மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், பிஎஃப் க்ளெய்ம்கள் நிராகரிக்கப்படலாம்.
வெற்றிகரமான க்ளெய்ம்களுக்கு என்ன செய்ய வேண்டும்
வெற்றிகரமான EPF க்ளெய்ம் செட்டில்மென்ட்டின் வாய்ப்புகளை மேம்படுத்த, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் தகவல்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், க்ளெய்ம் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் அனைத்து விவரங்களையும் க்ராஸ் வெரிஃபிகேஷன் செய்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தெளிவான தகவல்தொடர்பு, ஆவணங்களில் துல்லியம் மற்றும் EPFO வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுதல் ஆகியவை க்ளெய்ம் செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைய உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ