புதுடெல்லி: 2019 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் வாரணாசி இடையே தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை தற்போது நாடு முழுவதும் மொத்தம் 25 இடங்களில் இயங்கிவருகிறது. அனைவராலும் விரும்பப்படும் வந்தே பாரத் ரயிலின் நவீன பதிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்திற்குள் வெளியிடப்படும். புதிய ரயில் பெட்டிகள் பயணிகளுக்கு வசதியான பயணத்தை தருகிறது. நாட்டில் உள்ள ராஜ்தானி ரயில்களுக்குப் பதிலாக, வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சின் முதல் முன்மாதிரி பெங்களூருவைச் சேர்ந்த பாரத் எர்த் மூவர் லிமிடெட், சென்னையைச் சேர்ந்த ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையுடன் இணைந்து வடிவமைத்துத் தயாரிக்கிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சுகளின் முழு உடலும், துருப்பிடிக்காத எஃகால் ஆனது. ரயிலின் நிறக் குறியீடாக ஆரஞ்சு நிறக் கோடுகளுடன் வெள்ளை நிற உடலமைப்பு இருக்கும். இதன் உட்புற அலங்காரம் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும், மேலும் ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயின்ட் இருக்கும்.
வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியின் உருவாக்கம் தற்போதையதைப் போலவே இருந்தாலும்,16 கார்களைக் கொண்டிருக்கும், இதில் ஒரு கார் முதல் அடுக்கு ஏசி, நான்கு 2-அடுக்கு பெட்டிகள் மற்றும் பதினொரு 3-அடுக்கு ஏசி பெட்டிகளுக்கு ஒதுக்கப்படும்.
மேலும் படிக்க | இனி சென்னை - பெங்களூரு சீக்கிரமே போகலாம்... செம வேகத்தில் இனி ரயில்கள் பறக்கும்!
வந்தே பாரத் ரயில்களில் ஒருமுறை பயணித்தார்கள், மீண்டும் மீண்டும் அதிலேயே பயணிக்க விரும்பும் அளவில் அதன் வடிவமைப்பு கவர்ச்சியாக இருக்கும்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் இருக்கும் ஒரு கூடுதல் அம்சம், மக்கள் மேல் பெர்த்களுக்கு ஏற உதவும் மென்மையான பொருட்களால் செய்யப்பட்ட படிகள் ஆகும். தற்போது ரயில்களில் கொடுக்கப்பட்டுள்ள படிகள் அல்லது ஏணிகள் கடினமானவை மற்றும் எஃகால் செய்யப்பட்டவை. வந்தே பாரத் ரயிலில் உள்ள படிகள், ஃபைபர்-கிளாஸ் மாறுபாட்டால் செய்யப்பட்டவைகளாக இருக்கும்.
முதல் ரயிலில் 22 பெட்டிகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் ஸ்லீப்பர் ரயிலின் முதல் பதிப்பில் 857 பெர்த்கள் இருக்கும், அவற்றில் சுமார் 5% இந்திய ரயில்வே ஊழியர்களுக்காக ஒதுக்கப்படும், மீதமுள்ள 823 பெர்த்கள் பயணிகளுக்காக இருக்கும். மூன்று கழிப்பறைகள், ஒரு மினி பேண்ட்ரி, ஒவ்வொரு இருக்கைக்கும் படிக்கும் விளக்குகள், ஒரு டிரஸ்ஸிங் மிரர், மொபைல் ஸ்டாண்ட், சென்டர் டேபிள் தவிர கீழ் பெர்த்தில் இருக்கைகளுக்கு இடையே ஹேண்ட்ரெஸ்ட்-கம்-காபி டேபிள் ஆகியவை புதிய வடிவமைப்பின் ஒரு பகுதியாகும்.
மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் ‘9’ புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
தற்போதைய ரயில்களில், ஏர் கண்டிஷனிங் மிகவும் குளிராகவோ அல்லது சூடாகவோ இருக்கும். புதிய ரயில் பெட்டியில், தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு இருக்கும், இது வெப்பநிலையை கட்டுப்படுத்தும், வெளிப்புற வெப்பநிலையை கணக்கிட்டு, ரயிலுக்குள் அதை சரிசெய்யும்.
ஸ்லீப்பர் வந்தே பாரத் அரை நிரந்தர கப்ளரின் சிறந்த பதிப்பைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மென்மையான பிரேக்கிங்கிற்கு உதவும். அதிர்வுகளோ அல்லது திடீர் பிரேக்கிங் இருக்காது, அரை நிரந்தர கப்ளர் அதை எளிதாக்கும்.
ரயில் வழித்தடங்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வந்தே பாரத் சேர் கார்களில் காணப்படும் 'கவச்' எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பு ஒவ்வொரு ரயிலிலும் பொருத்தப்பட்டு இருக்கும்.
மேலும் படிக்க | ரயில் ஏசி இருக்கை டிக்கெட் கட்டண குறைப்பு! ஆனால் சில நிபந்தனைகள் உண்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ