Budget 2024: வரி சலுகை முதல் வட்டி விகிதம் வரை... சாமானியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்..!

Union Budget 2024: நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நடுத்தர வர்க்கத்தினருக்கும், உழைக்கும் மக்களுக்கும் நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்பையும் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 29, 2024, 04:34 PM IST
  • 2024 பட்ஜெட்டில் காப்பீடு தொடர்பான விலக்குகளும் அறிவிக்கப்படலாம்.
  • வருமான வரி விலக்கு குறித்த எதிர்பார்ப்பு.
  • வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
Budget 2024: வரி சலுகை முதல் வட்டி விகிதம் வரை... சாமானியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்..! title=

Union Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய பட்ஜெட்டை (Union Budget 2024) தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் அன்று தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு முதல் பாதுகாப்புத் துறைகள் வரை இந்த பட்ஜெட்டில் ய அறிவிப்புகள் இருக்கலாம். இதுதவிர நடுத்தர வர்க்கத்தினருக்கும், உழைக்கும் மக்களுக்கும் நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்பையும் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாமானியர்களுக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள் 

வருமான வரி விலக்கு குறித்த எதிர்பார்ப்பு

நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்க மத்திய அரசும் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அறிவிக்கலாம். வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் விலக்கு பெறுவதற்கான வரம்பை ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு மேல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்தால், பிபிஎஃப் மற்றும் காப்பீட்டின் கீழ் வழங்கப்படும் வரி விலக்கு அதிகரிக்கும், இது நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு நேரடியாக பலனளிக்கும்.

ஜிஎஸ்டியில் இருந்து காப்பீடு விலக்கு

2024 பட்ஜெட்டில் காப்பீடு தொடர்பான விலக்குகளும் அறிவிக்கப்படலாம். வரும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பார் என்றும், இதனால் காப்பீட்டு பிரீமியம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலக்கு பெறுவதன் மூலம், காப்பீட்டின் எண்ணிக்கையும் அதிகரித்து, பொருளாதாரம் வளரும்.

பட்ஜெட்டில் வரிச்சலுகை, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள்

 வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேர்தலை கருத்தில் கொண்டு, இடைக்கால பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தவிர, நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிச்சலுகை, மலிவு விலை வீடுகள், பணவீக்கத்திலிருந்து நிவாரணம் மற்றும் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்தல் போன்ற விஷயங்களையும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | Budget 2024: சேமிப்பு கணக்கு வட்டி வருமானத்தின் மீதான வரி விலக்கு அதிகரிக்கலாம்!

வேலைவாய்ப்பு திட்டத்தின் விரிவாக்கம்

நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் தன்னம்பிக்கை இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தை (ABRY) மத்திய அரசு விரிவுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த திட்டம் மார்ச் 2024க்குள் முடிவடையும். அதே நேரத்தில், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் NREGS திட்டத்தின் பட்ஜெட்டையும் அதிகரிக்கலாம். இது தவிர, ரயில்வே, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க சில சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிடலாம்.

வட்டி வருமானத்தின் மீதான வரிவிலக்கு

 சாமானியர்களுக்கான பொதுவான முதலீட்டு விருப்பங்களில், வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்வதாகும். இந்த சேமிப்புக் கணக்குகளில் வைத்திருக்கும் பணத்தின் மீதான வட்டிக்கு, வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80TTA பிரிவின் கீழ், ஒரு நிதியாண்டில் ரூ.10,000 வரிவிலக்கு உண்டு. அதாவது 10,000 ரூபாய் வரையிலான சேமிப்புக் கணக்கின் வட்டி வருமானத்திற்கு வரி கிடையாது. இந்த வரம்பை 10,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக அரசாங்கம் உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News