பிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், எதிர்கால நிதி தேவைக்கு உதவுவதாகவும் கருதப்படுகிறது. பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு போட்டிபோட்டுக்கொண்டு வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது, அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களின் எஃப்டி கணக்குகளுக்கு வங்கிகள் அதிகப்படியான வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஒவ்வொரு வங்கிகளும் பிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த தொடங்கியதையடுத்து கடந்த திங்கள்கிழமையன்று இரண்டு வங்கிகள் அதன் எஃப்டி கணக்குகளுக்கான வட்டி விகிதங்களில் சில திருத்தங்களை மேற்கொண்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (யூஎஸ்எஃப்பி) நான்-காலப்ல் பல்க் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தி அமைத்துள்ளது. இந்த வங்கி ரூ. 2 கோடிக்கு மேல் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 2-3 ஆண்டுகள் மற்றும் 3-5 ஆண்டுகளுக்கு 7.1% வரை வட்டி வழங்குகிறது.
நான்-காலப்ல் பல்க் டெபாசிட்டுகளின் அடிப்படியில் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படாது. மேலும், இந்த டெபாசிட்டுகளுக்கான வட்டியானது 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு காலாண்டு கூட்டு அடிப்படையில் கணக்கிடப்படும் என்று யூஎஸ்எஃப்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் வங்கி தரப்பில் கூறுகையில், மூத்த குடிமக்களின் அவசர தேவைக்காக நான்-காலப்ல் பல்க் டெபாசிட்டுகள் வழங்கப்படுவதில்லை என்று கூறியுள்ளது. கடந்த ஜூலை-6ம் தேதி முதல் யூஎஸ்எஃப்பி வங்கியானது சில்லறை முதலீட்டாளர்களுக்கான எஃப்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. தற்போது வங்கி மூத்த குடிமக்களுக்கு 2-3 ஆண்டுகள் மற்றும் 3-5 வருட கால டெபாசிட்டுகளுக்கு 8.15% வரை வட்டி வழங்குகிறது மற்றும் 60 வயதிற்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 2-3 ஆண்டுகள் மற்றும் 3-5 ஆண்டுகள் வரையிலான எப்டி கணக்குகளுக்கு அதிகபட்சமாக 7.65% வரையிலான வட்டியை தருகிறது.
மேலும் படிக்க | LIC Housing Finance: வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்கிறது LIC
மேலும் ஆகஸ்ட்-22ம் தேதி முதல் ஐடிபிஐ வங்கி பல்வேறு தவணைக்காலங்களில் டெர்ம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது, இப்போது வங்கி அதிகபட்சமாக 6.55% வரையிலான வட்டியை வழங்குகிறது. அம்ரித் மஹோத்சவ் எஃப்டி திட்டத்தின் கீழ் சிறப்பு 500 நாட்கள் டெபாசிட்டை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது, இது 6.70 உச்ச விகிதத்தை வழங்குகிறது. இந்த அம்ரித் மஹோத்சவ் சலுகையானது இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை மட்டுமே கிடைக்கும் என்றும் ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஐடிபிஐ வங்கி 3.63% விகிதத்தில் அமெரிக்க டாலரால் நியமிக்கப்பட்ட எஃப்சிஎன்ஆர்(B) டெபாசிட்டுகளுக்கு 500 நாட்களுக்கு சிறப்பு பக்கெட்டையும் வழங்குகிறது. தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட்டுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை 5.50% முதல் 6.10% வரை வழங்க திருத்தியமைத்துள்ளது.
மேலும் படிக்க | M.com, MBA முடித்தவர்களுக்கு Netflix-ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ