ரிலயன்ஸ் ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஒரு கோடி அபராதம் விதித்தது..!!!

ரிலயன்ஸ் ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு ( Reliance Jio Payments Bank Limited) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆகியோரை மீண்டும் நியமனம் செய்தது தொடர்பான தகவலை தாமதமாக வழங்கியதற்காக ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2020, 10:52 PM IST
  • ரிலயன்ஸ் ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு ( Reliance Jio Payments Bank Limited) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விளக்குமாறு உத்தரவிட்டு, ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.
ரிலயன்ஸ் ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஒரு கோடி அபராதம் விதித்தது..!!! title=

ரிலயன்ஸ் ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு ( Reliance Jio Payments Bank Limited) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆகியோரை மீண்டும் நியமனம் செய்தது தொடர்பான தகவலை தாமதமாக வழங்கியதற்காக ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

விதிகளை பின்பற்றாததற்காக ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு  ( Reliance Jio Payments Bank Limited) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  ஜியோ (JIO) பேமென்ட்ஸ் வங்கி பிரிவு 47(1)(C) கீழ் விதியையும் மீறியுள்ளது. எந்தவொரு பரிவர்த்தனையையும் முடிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவின் ஒழுங்குமுறை விதிமுறைகளையும் ஜியோ பேமென்ட்ஸ் வங்கி மீறியுள்ளதாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் சட்டத்தின் பிரிவு 35 பி -ல் கூறியுள்ளபடி, ஜியோ பேமென்ட்ஸ் வங்கி, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியை மீண்டும் நியமனம் செய்வது குறித்த தகவல்களை பதவிக்காலம் முடிவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு கொடுத்திருக்க வேண்டும். இருப்பினும், பதவிக்காலம் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வங்கி இந்த தகவலை வழங்கியுள்ளது. எனவே ஒரு குறிப்பிட்ட நெறிமுறையை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விளக்குமாறு உத்தரவிட்டு, ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. வங்கியின் பதிலைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட பின்னர், தனிப்பட்ட விசாரணை நடவடிக்கைகளின் போது அந்நிறுவன அளித்த பதில் மதிப்பாய்வு செய்யப்பட்டது, அதன்பிறகு ரிசர்வ் வங்கி  அபராதம் விதித்தது.

ALSO READ | ‘லவ் ஜிஹாத்தை’ தடுக்க உத்தரபிரதேச அரசு சட்டம் கொண்டு வரும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News