இந்த பண்டிகை காலங்களில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான தள்ளுபடியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், வரும் நாட்களில், நீங்கள் இதனை வாங்க அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
மிக விரைவில், டிவி, மிக்ஸி, வாஷிங் மிஷின், ஏர் கண்டிஷனர், உட்பட பல எலக்ரானிக்ஸ் பொருட்களின் (Electronic goods) விலை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏதேனும் வாங்க திட்டமிட்டிருந்தால், உடனே வாங்கவும். காலம் தாழ்த்த வேண்டாம்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 15-40% அதிகரிக்கும். பண்டிகை காலங்களில் நல்ல விற்பனை இருந்தது. இதனால், சரக்குகள் காலியாக உள்ளது என்று தொழில்துறையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். புதிய தயாரிப்புகளின் விலை திடீர் என்று அதிகரித்துள்ளது. இது டிமாண்டையும் பாதிக்கும். ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்த தொழில் துறையினர் கூறுகின்றனர்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதில் தாமிரம், துத்தநாகம், அலுமினியம், எஃகு, பிளாஸ்டிக் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த உலோகங்களை கடல் வழியாக கொண்டு வருவதற்கான சரக்கு கட்டணம் 40-50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
பண்டிகை காலங்களில் (Festival season) நுகர்வோர் மீது இந்த விலை அதிகரிப்பை நாங்கள் சுமத்தவில்லை என்று தொழில்துறை சேர்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இப்போது விலையை அதிகரிப்பதை தவிர வேற்உ வழியில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, விலை திடீரென்று இவ்வளவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
எனவே, நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏதேனும் வாங்க திட்டமிட்டிருந்தால், உடனே வாங்கவும். காலம் தாழ்த்த வேண்டாம்.
ALSO READ | Vastu Tips: வீட்டில் மகிழ்ச்சி பொங்க உதவும் வாஸ்து குறிப்புகள்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR