தனது புதிய கிளையை லடாக் டிஸ்கிட் கிராமத்தில் நிறுவியது SBI!

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கிளைகளைக் கொண்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது புதிய கிளையை லடாக் டிஸ்கிட் கிராமத்தில் சனிக்கிழமை நிறுவியுள்ளது! 

Last Updated : Sep 15, 2019, 08:18 AM IST
தனது புதிய கிளையை லடாக் டிஸ்கிட் கிராமத்தில் நிறுவியது SBI! title=

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கிளைகளைக் கொண்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது புதிய கிளையை லடாக் டிஸ்கிட் கிராமத்தில் சனிக்கிழமை நிறுவியுள்ளது! 

இந்த லடாக் கிராமம் கடல் மட்டத்திலிருந்து 10,310 அடி உயரத்தில் உள்ளது. எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் இந்த கிளையை நுப்ரா பள்ளத்தாக்கில் தொடங்கிவைத்தார். நாட்டின் மிகப்பெரிய வங்கியின் இந்த புதிய கிளை பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், இது சியாச்சின் எல்லையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சமீபத்தில் நடைமுறைக்கு வந்த யூனியன் பிரதேசமான லடாக்கின் டிஸ்கிட் கிராமம் சுமார் 6000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் நிதி சேர்க்கப்படுவதற்கு வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் கீழ், எஸ்பிஐயின் 14 கிளைகள் முழு லடாக் பிராந்தியத்திலும் அமைந்துள்ளன. 

இப்போது புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்கிய பின்னர் எஸ்பிஐ லடாக்கில் மேலும் கிளைகளை திறக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலங்களில் உள்ள மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (SLBC) பொறுப்பை ஏற்க எஸ்பிஐ விருப்பம் தெரிவித்துள்ளது.

உலகின் மிக உயர்ந்த வங்கி கிளை, பெருவின் புனேவின் மகுசானியில் கடல் மட்டத்திலிருந்து 14,393 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது தவிர, பாகிஸ்தான்-சீனா எல்லையில் உள்ள குஞ்சேராப் பாஸில் கடல் மட்டத்திலிருந்து 15,397 அடி உயரத்தில் பாக்கிஸ்தான் தேசிய வங்கியின் ஏடிஎம் அமைந்துள்ளது. இந்த வரிசையில் தற்போது லடாக் டிஸ்கிட் கிராமத்தில் (10,310 அடி) அமைந்துள்ள எஸ்பிஐ கிளை இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News