Sukanya Samriddhi Yojana: குறைந்த முதலீட்டில், நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் யாருக்கு தான் இருக்காது. குறைந்த பண முதலீட்டில் உங்களுக்கு பெரிய தொகையை கொடுக்கும், மத்திய அரசின் சூப்பாரான திட்டம் உள்ளது. இந்த அரசாங்கத் திட்டம் சுகன்யா சமிர்தி யோஜனா அதாவது SSY திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் செல்ல மகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம், மேலும் வருமான வரியிலும் சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 1 ரூபாய் சேமித்தால் போதும்
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது மத்திய அரசின் (Central Government) சிறு சேமிப்புத் திட்டமாகும், இது 'பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தைகளை காப்போம்' என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களில், சுகன்யா சம்ரித்தி யோஜனாவிற்கு சிறந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. வெறும் 250 ரூபாயுடன் இதில் கணக்கை முடியும். இதன் பொருள் நீங்கள் ஒரு நாளைக்கு 1 ரூபாய் சேமித்தால் போதும், இந்த திட்டத்தில் சேர்ந்து உங்கள் செல்ல மகளின் எதிகாலத்தை பாதுகாக்கலாம். குறைந்தது ரூ .250 முதல், அதிக பட்சம் ரூபாய் ரூ .1.5 லட்சம் வரை
இதில் முதலீடு செய்யலாம்.
ALSO READ: PM Kisan: ரூ.2000 பணம் உங்களுக்கு வரலயா? உடனே இதைப் பண்ணுங்க!
சுகன்யா சம்ரிதி திட்டத்திம் செய்யப்படும் முதலீட்டிற்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான வரி விலக்கும் உண்டு. முன்னதாக, இதில் 9.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டது.
கணக்கை தொடக்கும் முறை
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் இணைந்து கணக்கை, தபால் அலுவலகம் அல்லது வணிகக் கிளையின் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட கிளைகளிலும் தொடங்கலாம். இதில், சேர பெண் குழந்தையின் வயது 10 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ .250 வைப்பு தொகையுடன் கணக்கு திறக்கப்படலாம். நடப்பு நிதியாண்டில் சுகன்யா சமிர்தி யோஜனாவின் கீழ் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ .1.5 லட்சம். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த கணக்கை தொடக்க முடியும்.
இதில் கணக்கு தொடக்க, குழந்தையின் பிறந்த தேதி, பிறப்பு சான்றிதழ் விவரங்கள், பெற்றோரின் அடையாள ஆவணங்கள், பான் எண் போன்ற விபரங்கள் மற்றும் ஆவணங்கள் தேவை.
சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கைத் திறந்த பிறகு, பெண் குழந்தைக்கு 21 வயதாகும் வரை அல்லது 18 வயதுக்குப் பிறகு அவர் திருமணம் செய்து கொள்ளும் வரை இந்த கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.
ALSO READ | Jio வழங்கும் ₹3,499 திட்டம்; அப்படி என்ன தான் இருக்கு; விபரம் உள்ளே..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR