மும்பை: சோவரின் தங்கப் பத்திர திட்டத்தின் (Sovereign Gold Bond Scheme) ஆறாவது தவணைக்கான வெளியீட்டு விலை கிராமுக்கு 5,117 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி (RBI) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. Sovereign Gold Bond Scheme 2020-21 தொடர் VI, சந்தாவுக்காக ஆகஸ்ட் 31, 2020 அன்று திறக்கப்பட்டு, செப்டம்பர் 4, 2020 அன்று மூடப்படும்.
ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 7 வரை சந்தாவிற்காக திறக்கப்பட்டிருந்த தொடர் ஐந்து (series V) பத்திரங்களுக்கான வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்திற்கு 5,334 ரூபாயாக இருந்தது. "சந்தா காலத்திற்கு முந்தைய வாரத்தின் கடைசி மூன்று வணிக நாட்களில் 999 பியூரிடி தங்கத்திற்கான சராசரி இறுதி விலையின் அடிப்படையில் பத்திரத்தின் பெயரளவு மதிப்பு, அதாவது ஆகஸ்ட் 26, 2020 ஆகஸ்ட் 28, ஆகிய தேதிகளில் பத்திரத்தின் மதிப்பு, கிராம் ஒன்றுக்கு 5,117 ரூபாயாக உள்ளது.” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கும், டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துவோருக்கும், கிராம் ஒன்றுக்கு உண்மையான மதிப்பை விட ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ALSO READ: ஏழைகளின் தோழன், PM ஜன் தன் யோஜனாவின் வெற்றிகரமான ஆறு ஆண்டுகள்: பிரதமர் பாராட்டு!!
"அத்தகைய முதலீட்டாளர்களுக்கு, தங்க பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்திற்கு 5,067 ரூபாயாக இருக்கும்" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Sovereign Gold Bond Scheme (SGB) 2020-21 ஐ இந்திய அரசு சார்பாக ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. 1 கிராம் அடிப்படை அலகு கொண்ட கிராம் (கள்) தங்கத்தின் பெருக்கங்களில் பத்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன. மேலும் SGB-ன் கால அளவு எட்டு ஆண்டுகளாக இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் ஆப்ஷனும் உள்ளது.
இந்த பத்திரங்களை, இங்கு வசிக்கும் நபர்கள், இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUF), அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடியும்.
இதில் குறைந்தபட்ச அனுமதிக்கப்பட்ட முதலீடு 1 கிராம் தங்கம். சந்தாவின் அதிகபட்ச வரம்பு தனிநபருக்கு 4 கிலோ, எச்யூஎஃப்-க்கு 4 கிலோ, அறக்கட்டளைகள் மற்றும் இது போன்ற நிறுவனங்களுக்கு 20 கிலோவாக இருக்கும்.
தங்கப் பத்திரம் வங்கிகள் (சிறு நிதி வங்கிகள் மற்றும் கட்டண வங்கிகள் தவிர), ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SHCIL), நியமிக்கப்பட்ட தபால் நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் (NSE மற்றும் BSE) மூலம் விற்கப்படும்.
Sovereign Gold Bond Scheme 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கப்பட்டது. தங்கத்தை திடமாக வாங்கி வைப்பதைக் குறைப்பதையும், தங்கம் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் சேமிப்பின் ஒரு பகுதியை நிதி சேமிப்பிற்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தங்கப் பத்திரம் தொடங்கப்பட்டது.
2019-20 ஆம் ஆண்டின், ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின் படி, 2015 நவம்பரில் தொடங்கப்பட்டதிலிருந்து, Sovereign Gold Bond Scheme மூலம் மொத்தம் ரூ .9,652.78 கோடி (30.98 டன்) (37 தவணையில்) திரட்டப்பட்டுள்ளது.