புதுடெல்லி: நீங்களும் மலிவான தங்கத்தை வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்த வாய்ப்பை உங்களுக்கு அரசாங்கம் வழங்குகிறது. செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 வரை சந்தையில் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கலாம். மத்திய அரசின் இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond) தங்கம் வாங்க அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஆகும்.
தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தியாக, சந்தையை விட குறைந்த விலையில் தங்கத்தைப் பெறலாம். இது குறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நீங்கள் எப்போது சவரன் தங்கப் பத்திரத்தை மலிவாக வாங்கலாம் மற்றும் எந்த விலையில் தங்கத்தைப் பெறுவீர்கள் என்ற விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களுக்காக, தங்கப் பத்திரத் திட்டத்தை 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
தங்கம் விலை என்ன?
சவரன் தங்கப் பத்திரத்தின் அடுத்த தவணைக்கான வெளியீட்டு விலை கிராமுக்கு ரூ.5,923 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11 முதல் தங்கம் வாங்கலாம்
இந்த தங்கப் பத்திரத்தின் விற்பனை செப்டம்பர் 11 முதல் தொடங்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான SGB இன் இரண்டாவது தவணை இதுவாகும். 999 தூய்மையான தங்கத்திற்கான SGB இன் விலை, ஒரு கிராமுக்கு ரூ.5,923 என்று ரிசர்வ் வங்கி (RBI) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | வேருடன் அழிக்கப்படுவார்கள்... காலிஸ்தானி தீவிரவாதம் குறித்து ரிஷி சுனக்!
தள்ளுபடி பலன்கள்
ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த பிறகு, ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் மீடியம் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, விலையில் இருந்து ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.50 தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அறிக்கையின்படி, அத்தகைய முதலீட்டாளர்களுக்கான தங்கப் பத்திரங்களின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5,873 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீடு செப்டம்பர் 11 முதல் 15 வரை திறந்திருக்கும்.
தங்கத்தை எங்கே வாங்கலாம்?
பத்திரங்கள் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், நியமிக்கப்பட்ட தபால் நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளான பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ மூலம் விற்கப்படும்.
தங்கத்தில் முதலீடு
இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில், அதாவது நகையாகவே, நாணயமாகவோ வாங்காமல் பத்திர வடிவில் வாங்கலாம். முதலீட்டிற்கான பலனை பெற முடியும். தங்கத்தை பொருள் வடிவில் வைத்திருந்தால், அதனை திருடு போகாமல் பாதுக்காக்க வேண்டிய கவலையும் பொறுப்பும் இருக்கிறது என்பதால், தங்கத்தை ஆவண வடிவில் பாதுகாப்புது மிக எளிது என்பது இதில் உள்ள மற்றொரு முக்கிய சிறப்பு அம்சம் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது. பாரம்பரிய தங்கத்தின் தேவையைக் குறைப்பதன் ஒரு பகுதியாக தங்கப் பத்திரங்களின் விற்பனை முதன்முதலில் நவம்பர் 2015 இல் தொடங்கப்பட்டது.
குறைந்தபட்சம் 1 கிராம் தங்கத்தை வாங்கலாம்
ஒரு கிராம் தங்கத்தை அடிப்படை அலகாக கொண்டு இந்த பத்திரங்கள் விற்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு கிராம் தங்கத்தில் குறைந்தபட்ச முதலீடு செய்யலாம், அதிகபட்ச வரம்பு நான்கு கிலோகிராம் வரை இருக்கும். தங்கப் பத்திரத்தின் முதிர்வு காலம் எட்டு ஆண்டுகளாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு பத்திரத்தை பணமாக்கிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது! ஜாமீனில் வெளிவரமுடியாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ