வாழ்க்கையில் நீங்கள் நிதிப் பிரச்சனையை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், உங்களுக்கும் பணத்துக்கும் இடையேயான உறவை கவனிக்க வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை எப்படி மேலாண்மை செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களை நீங்கள் நிதிச் சிக்கலில் இருந்துவிடுவித்துக் கொள்ள முடியும்.
வருவாயில் கவனம்
நீங்கள் எப்போதும் நிகர வருவாய் மற்றும் கடன், செலவு ஆகியவற்றில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் பணம் வருகிறது, அதனை எதற்காகவெல்லாம் செலவழிக்கிறீர்கள், கடனுக்கு செலுத்துகிறீர்கள் என்பதில் தெளிவாக இருப்பது மிக மிக அவசியம். கடனிலும் அவசர கடன், நீண்ட கால கடன், குறுகிய கால கடன் என பிரித்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப வருவாய் ஆதாரங்களை பெருக்க முயற்சி செய்யுங்கள். துல்லியமான நிதி மேலாண்மையே உங்களை கடனில் இருந்து விடுபடச் செய்யும்.
மிகப்பெரிய நெருக்கடியான சூழல் வருகிறது என நீங்கள் முன்பே கணித்துவிட்டால், அதில் இருந்து விடுபடுவதற்கு உங்களிடம் இருக்கும் வீடு, கார், நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களின் மூலம் கிடைக்கும் தொகையை தோராயமாக கணக்கீடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். மொத்த கடனுக்கும் வருவாய்க்கும், வருவாய் பற்றாக்குறைக்கும் இடையேயான இடைவெளி எவ்வளவு என்பதை நீங்கள் துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | EPFO ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் 1 லட்சம் ரூபாய்! முழு தகவல்!
செலவு கவனியுங்கள்
செலவு தான் உங்களின் நிதி மேலாண்மையை வெட்ட வெளிச்சமாக்கும். உணவு முதல் உடை வரை என அனைத்திற்கும் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை துல்லியமாக கணக்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உணவுக்காக நாள்தோறும் செலவழிக்க வேண்டியிருக்கும். அதனால், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை தேர்தெடுத்தாலே, அதற்கான நிதிச் செலவுகளை கணக்கிட்டுக் கொள்ள முடியும். அதுபோக, பெட்ரோல், மொபைல் ரீச்சார்ஜ், கரண்ட் பில் உள்ளிட்ட இதர வீட்டுச் செலவுகள், சமையல் எரிவாயு உள்ளிட்ட செலவுகளை உள்ளடக்கி ஒரு பட்டியலை தயாரித்துக் கொள்ளுங்கள்.
பட்ஜெட் தயாரிப்பு
சில மாதங்கள் உங்கள் செலவுகள் மற்றும் வரவை கண்காணித்த பிறகு, தேவையில்லாத விஷயங்களை நீக்குவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும். அப்போது, எவற்றுக்கெல்லாம் தேவையில்லாமல் நீங்கள் செலவு செய்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது ஆச்சரியப்படுவீர்கள். பின்பு, தேவையில்லாத செலவுகளை நீங்கள் இதன் மூலம் குறைக்க முடியும். நிதி இலக்குகளை தீர்மானித்து, அதற்குள் உங்கள் பட்ஜெட்டை அடக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட பணத்தை சேமிக்கவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். பட்ஜெட் என்பது ஒரு அழகிய வரைபடம் போன்றது. அதனை நீங்கள் துல்லியமாக வரைந்து உங்களிடம் வைத்துக் கொண்டால், சரியான வழியில் பயணிக்க பெரும் உதவி செய்யும்.
முதலீடு
வருவாய், செலவினம் மற்றும் சேமிப்பு என கணக்கிட்டு வைத்துக் கொள்ளும் நீங்கள், சரியான முதலீடு குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை பெருக்குவதற்கு உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் முழுமையாக நிதிச் சிக்கலில் இருந்து விடுபட, இந்த முதலீடு கைகொடுக்கும்.
மேலும் படிக்க | இந்த வங்கிகளில் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ