ஆறு மாதங்களில் மூன்று மடங்கான பங்குகள் விலை... உற்சாகத்தில் முதலீட்டாளர்கள் !

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு ஆற்றல் நிறுவன பங்கு ஒரு லாபகரமான முதலீடாக நிரூபித்துள்ளது. பல நிறுவனங்களின் பங்குகளில் செய்யும் நீண்ட கால முதலீடுகள் பல சமயங்களில் லாபங்களை அள்ளித் தருகிறது என்பதை மறுக்க இயலாது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 8, 2023, 04:04 PM IST
  • வெறும் ஆறு மாதங்களில் மும்மடங்கான முதலீட்டு மதிப்பு.
  • பங்கு விலை ரூ.20.7 என்ற அளவில் அதிகரித்து காணப்படுகிறது.
  • டன் குறைப்பு தொடர்பாக செய்யப்பட்ட நடவடிக்கைகளும் பங்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆறு மாதங்களில் மூன்று மடங்கான பங்குகள் விலை...  உற்சாகத்தில் முதலீட்டாளர்கள் ! title=

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு ஆற்றல் நிறுவன பங்கு ஒரு லாபகரமான முதலீடாக நிரூபித்துள்ளது. பல நிறுவனங்களின் பங்குகளில் செய்யும் நீண்ட கால முதலீடுகள் பல சமயங்களில் லாபங்களை அள்ளித் தருகிறது என்பதை மறுக்க இயலாது. அதே வேளையில், குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள் குறுகிய காலத்தில் அதிசயங்களைச் செய்து முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை அள்ளி பொழிந்துள்ளது. ஆம், நாம் சுலோன் எனர்ஜியின் (Suzlon Energy Ltd) பங்குகளைப் பற்றி பேசுகிறோம். , இது வெறும் 6 மாதங்களில் அதன் முதலீட்டாளர்களின் பணத்தினை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

வெறும் ஆறு மாதங்களில் மும்மடங்கான முதலீட்டு மதிப்பு

கடந்த ஆறு மாதங்களில் சுஸ்லான் எனர்ஜியின் பங்குகளின் விலையில் அற்புதமான உயர்வு ஏற்பட்டுள்ளது மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரும் லாபத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 2023 இல், அதன் விலை சுமார் ரூ.7 என்று மட்டுமே இருந்த நிலையில், இப்போது இந்த பங்கின் விலை ரூ.30ஐ எட்டியுள்ளது. கடந்த வெள்ளியன்று, இந்தப் பங்கின் விலை ரூ.29.25 என்ற அளவில் முடிவடைந்தது. மே மாத தொடக்கத்தில் இருந்து தற்போது அக்டோபர் வரையிலான அதன் பயணத்தைப் பார்த்தால், மே 8, 2023 அன்று, இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ. 8.55 ஆக இருந்தது, இந்த காலகட்டத்தில் பங்கு விலை ரூ.20.7 என்ற அளவில் அதிகரித்து காணப்படுகிறது. .

புதிய ஆர்டர்களைப் பெற்று வலுவடைந்து வரும் நிறுவனம்

கடந்த ஆறு மாதங்களாக சூரிய ஆற்றல் துறையில் இந்த சக்திவாய்ந்த Suzlon Energy Ltd நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணத்தைப் பற்றி நாம் பேசினால், சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் ஆர்டர் புக்கிங்  மற்றும் தொழில் முன்னேற்றம் காரணமாக வலிமையுடன் தொடர்ந்து புதிய ஆர்டர்களைப் பெறுகிறது. கடன் குறைப்பு தொடர்பாக செய்யப்பட்ட நடவடிக்கைகளும் அதன் பங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தில் பங்கு குறுகிய காலத்தில் மிகவும் லாபம் தரும் பங்காக மாறியது மற்றும் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை அளித்துள்ளது.

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!

வெள்ளிக்கிழமை உயர் நிலை தொட்ட பங்கு விலைகள்

சுஸ்லான் எனர்ஜி லிமிடெட்டின் சந்தை மூலதனம் ரூ. 3,932 கோடியாக உள்ளது. மூலெம் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் அதன் பங்கு விலைகள், 52 வாரத்தில் உயர் அளவை எட்டியது. முந்தைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.28.85 என்ற அளவில் துவங்கி அதிகபட்சமாக ரூ.29.80 என்ற அளவை எட்டியது. இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில் அதன் வேகம் குறைந்து ரூ.29.25-ல் முடிந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்தப் பங்கு மதிப்பு 488.78 சதவிகிதம் அதிகரித்து சிறப்பான லாபத்தைக் கொடுத்துள்ளது.
 
கடந்த 6 மாதங்களில் சாதனை அளவு

சுஸ்லான் ஸ்டாக் கடந்த ஓராண்டில் 282.35 சதவீத லாபத்தை அளித்துள்ளது. அதே சமயம் இந்த பங்கின் விலை கடந்த ஒரு மாதத்தில் 21.62 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து நாள் வர்த்தகத்தில் பங்கு விலை 13.37 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்போது கடந்த ஆறு மாதங்களில் இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரிப்பு பற்றி பேசினால், அதன் விலை மே 8 ஆம் தேதி ரூ 8.55 ஆக இருந்தது, அடுத்த மாதம் ஜூன் 8 ஆம் தேதி ரூ 13.35 ஆனது. அடுத்த மாதம், ஜூலை, 7ல், 17.85 ரூபாயாகவும், ஆகஸ்ட், 8ல், 18.60 ரூபாயாகவும் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, அதில் புயல் வேகத்தில் ஏற்றம் ஏற்பட்டு, செப்டம்பர் 8ம் தேதி, ஒரு பங்கின் விலை, 24.05 ரூபாயாக மாறிய நிலையில், தற்போது, 29.25  ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.

பங்குச் சந்தை வல்லுநர்கள் பரிந்துரை

ஊடக அறிக்கைகள் நம்பப்பட வேண்டும் என்றால், பங்குச் சந்தை வல்லுநர்கள் சுஸ்லான் எனர்ஜி ஸ்டாக் மீது அதிக நம்பிக்கை இருக்கிறார்கள் மற்றும் அதை வாங்க பரிந்துரைத்து நல்ல மதிப்பீட்டை வழங்குகிறார்கள். இந்த பங்கு உயரும் வேகத்தையும், நிறுவனத்தின் ஆர்டர் புக்கிங் வலுவடைவதையும் கருத்தில் கொண்டு, பல தரகு நிறுவனங்கள் இதற்கு புதிய இலக்கு விலையாக ரூ.40 என்ற அளவை நிர்ணயித்துள்ளன. அதாவது பங்குகள் விலை மேலும் அதிகரித்து ரூ.40 வரை செல்லும் என்கின்றனர் நிபுணர்கள்

(குறிப்பு- பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.)

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News